‘சேர்… என் வாகனத்தை திருப்பி தர சொல்கிறார்கள்’: மங்களவிடம் ஆனல்ட் முறையீடு!

நிர்வாக ஒழுங்குமுறைக்கு முரணாக தனக்கு வழங்கப்பட்ட அதிசொகுசு வாகனத்தை, அரசாங்கம் மீளப்பெறக்கூடாது என அமைச்சர் மங்கள சமரவீரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார் யாழ் முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட்.

இந்த சுவாரஸ்ய சம்பவம் நேற்று முன்தினம் வல்வெட்டித்துறையில், நீச்சல் தடாக திறப்பு விழாவின்போது இடம்பெற்றது.

வல்வெட்டித்துறையில் ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக நீச்சல் தடாகம் ஒன்று நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. அந்த நிகழ்வில் பிரபாகரன் தொடர்பாக தமிழ் அரசு கட்சி பிரமுகர்கள் மேடையில் முழங்கியிருந்தனர்.

அதே நிகழ்வில், தனிப்பட்ட வசதி வாய்ப்பு பற்றி அமைச்சர் மங்களவிடம் இரகசியமாக கோரிக்கை விடுத்தார் யாழ் முதல்வர்.

நிகழ்வின்போது மேடையில் விருந்தினர்கள் உட்கார்ந்திருந்தபோது, அமைச்சர் மங்கள சமரவீரவிடம், “சேர்… எனக்கு வழங்கப்பட்ட வாகனத்தை திருப்பி ஒப்படைக்கும்படி சொல்லியுள்ளார்கள். ஏதாவது செய்து அதை தடுக்க முடியாதா?“ என யாழ் முதல்வர் ஆனல்ட் கோரிக்கை விடுத்தார்.

அந்த இடத்தில் இருந்த ஏனைய பிரமுகர்கள் மிகுந்த அசௌகரியத்துடன் நெளிந்துள்ளனர். தெற்கிலிருந்து வரும் தலைவர்களிடம் தனிப்பட்ட தேவைகளிற்காக இப்படி குழைவது, கட்சி தொடர்பான அபிப்பிராயத்தை கீழிறக்குவதாக அமைந்து விடும் என்பதை கூட யாழ் முதல்வர் கருத்திலெடுக்காமல் இப்படி நடந்தது தம்மையும் சங்கடப்படுத்தியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனல்டின் கோரிக்கைக்கு, “பார்க்கலாம்“ என மங்கள பதிலளித்துள்ளார்.

யாழ் மாநகரசபை முதல்வர்களின் பாவனைக்குரிய வாகனம் தனக்கு தேவையில்லையென கூறிய ஆனல்ட், வடக்கு முதல்வரின் வாகனத்தை தருமாறு கோரி அடம்பிடித்து பெற்றிருந்தார். எனினும், நிர்வாக ஒழுங்குமுறைக்கு அது முரணாணது என்பதால், முதலமைச்சர்களிகுரிய வாகனத்தை ஒப்படைத்து விட்டு, முதல்வர்களிற்குரிய வாகனத்தை பெறும்படி ஆளுனர் அண்மையில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here