என் மனைவி ஒத்துழைப்பதில்லை: டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள் 9


எஸ்.மணிகண்டன் (39)
மஸ்கெலிய

எனக்கு திருமணமாகி 11 வருடங்கள் ஆகிறது. மூன்று பிள்ளைகள். சில மாதங்களாக ஆணுறுப்பு விரைப்பு தன்மையடைவதில் பிரச்சனையாக இருக்கிறது. நீரிழிவால் அந்த பிரச்சனையிருக்கலாமென நண்பர்கள் சொன்னார்கள். நீரிழிவு பரிசோதனை செய்தேன். நீரிழிவும் இல்லை. ஏன் திடீரென இந்த பிரச்சனை?

டாக்டர் ஞானப்பழம்: தம்பி… ஆணுறுப்பு விரைப்பு தன்மை அடையாததற்கு பல காரணங்கள் இருக்கும். இதில் ஒரு காரணம்தான் நீரிழிவே தவிர, அது மட்டும் காரணமாக இருக்காது.

உமக்கு, என்ன பிரச்சனையென்பதை பரிசோதனையின் மூலம்தான் உறுதியாக கூறலம். ஆனால், அனுபவத்தின் அடிப்படையில், உமது இரத்தக்குழாய் அடைப்பும் காரணமாக இருக்கலாமென ஊகிக்கிறேன்.

உடலின் ஒவ்வோர் உறுப்பும் சரியாகச் செயல்பட, ஒட்சிசனும், ஊட்டச்சத்துகளும் தேவை. இவை இரத்தத்தின் மூலமாகத்தான் ஆணுறுப்பு உள்பட அனைத்து உறுப்புகளுக்கும் சென்றடைகின்றன. இரத்தம் சரியாகச் சென்றடைய, இரத்தக்குழாய் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இரத்தக்குழாயில் மொத்தம் மூன்று அடுக்குகள் இருக்கின்றன. அவற்றின், உள்ளேயிருக்கும் அடுக்கின் பெயர் எண்டோதீலியம் (Inner layer – Endothelium). அதிக இரத்தம் தேவைப்படும்போது, இது விரிந்து கொடுக்கும்; மற்ற நேரங்களில் இயல்பாக இருக்கும். அதேபோல, உடலின் கழிவுகளும், கார்பன் டை ஒக்ஸைடும் வெளியேறுவதற்கு இந்த அடுக்கு ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இந்த அடுக்கில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், இரத்தக்குழாய்க்கு சுருங்கி, விரியும் தன்மை இல்லாமல் போய்விடும்; சில நேரங்களில் இரத்தக்குழாய் அடைப்பும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

ஆணுறுப்புக்கு இரத்தம் சரியாகச் சென்றால்தான் விரைப்புத்தன்மை ஏற்படும். மூளையின் தூண்டுதலால் செக்ஸ் உணர்வு வரும்போது, ஆணுறுப்பில் இரத்த ஓட்டம் அதிகமாகி, விரைப்புத்தன்மை ஏற்படும். எண்டோதீலிய அடுக்கில் பிரச்னை ஏற்பட்டு, இரத்த ஓட்டம் தடைபட்டால் விரைப்புத்தன்மை ஏற்படாது. இதேபோல, இதயத்திலிருக்கும் இரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டால், நெஞ்சுவலி ஏற்படும். எண்டோதீலியத்தில் பாதிப்பு உண்டாக ஆரம்பித்துவிட்டால், அது உடலிலிருக்கும் அனைத்து இரத்தக்குழாய்களிலும் ஏற்படும்.

ஆணுறுப்பிலிருக்கும் இரத்தக்குழாயின் விட்டம் 1-2 மில்லிமீட்டர் இருக்கும். இதயத்திலிருக்கும் இரத்தக்குழாயின் விட்டம் 3-4 மில்லிமீட்டர் இருக்கும். ஆணுறுப்பில் இருக்கும்இ ரத்தக்குழாய் சிறியது என்பதால், அடைப்பு விரைவாக வெளியே தெரிந்துவிடும். ஆனால், இதயத்திலிருக்கும் இரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டால், மெதுவாகத்தான் தெரியும். ஓர் ஆணுக்கு உடல்ரீதியான பிரச்னைகளால் விரைப்புத்தன்மைக் கோளாறு ஏற்பட்டால், ஏழு ஆண்டுகள் கழித்து இதயத்தில் கோளாறு ஏற்படும் என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கட்டுப்பாடில்லாத நீரிழிவு, கொழுப்புச்சத்து, உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், புகைபிடித்தல், புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துவது, உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கைமுறை போன்றவையே இதற்குக் காரணங்கள். உடலின் மற்ற உறுப்புகளில் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது என்பதன் அறிகுறிதான் விரைப்புத்தன்மை கோளாறு.

எனவே, உடனடியாக நீங்கள் உரிய மருத்துவரை நாடுவதுதான் சரி.

ம.செங்கமலன் (50)
நெடுங்கேணி

எனது மனைவிக்கு 43 வயது. எமக்கு நான்கு பிள்ளைகள். இப்பொழுது எனது மனைவி ஒத்துழைப்பதில்லை. எப்பொழுதாவது, சிரமப்பட்டு அவரை சமரசம் செய்து உடலுறவில் ஈடுபட்டாலும், அவர் அதில் ஈடுபடாக இல்லை. பெண்களிற்கு எத்தனை வயதில் பாலியல் நாட்டம் இல்லாமல் போகும்? அதை எப்படி கண்டு பிடிப்பது?

டாக்டர் ஞானப்பழம்: செக்ஸுவாலிட்டி என்று சொல்லப்படும் பாலுணர்வு என்பது பாலியல் செயல்பாடுகள் மற்றும் உடலுறவு சார்ந்தது மட்டுமல்ல. மாறாக, பெண்களைப் பற்றிய உணர்வுகள், பிறருடன் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்கிற பார்வை, பாலுறவில் அவர்களுடைய தேவைகள் என்னென்ன என எல்லாவற்றையும் உள்ளடக்கியது. ஒரு பெண்ணுக்கு அவருடைய இணை குறித்தும், உறவு குறித்தும் இருக்கும் உணர்வுகள் பாலியல்ரீதியாக திருப்தியடைவதில் முக்கியப் பங்குவகிக்கின்றன. பாலுறவில் பெண்களின் நாட்டமும், பாலுணர்வுத் தூண்டுதலும் மாறுபட்டவை.

அநேகமாக 30 முதல் 40 வயதுகளில் அதிகபட்சமாக அவர்கள் இன்பத்தைத் துய்ப்பவர்களாக இருப்பார்கள். இருந்தாலும், வாழ்நாள் முழுவதும் திருப்திகரமான பாலுறவில் ஒரு பெண்ணால் ஈடுபட முடியும். ஒரு பெண் பாலியல் உறவில் திருப்தியடைவதில் எந்தத் தடங்கல் வந்தாலும், அது ஒரு பாலியல் பிரச்னையாகக் கருதப்படும். அதை பெண்களின் பாலியல் செயலிழப்பு (Female Sexual Dysfunction) என்போம்.

பாலியல் உணர்வு சுழற்சி
(Sexual Response Cycle)

ஏன் பாலியல் பிரச்னைகள் ஏற்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள, முதலில் பாலியல் உணர்வு சுழற்சியைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தச் சுழற்சி ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒன்று என்றாலும், வெவ்வேறு மாற்றங்கள், வெவ்வேறு வேகத்தில் நடக்கின்றன.

ஆசை (மனம் எழுச்சி பெறும் நிலை):

இது, பாலியல் உறவுக்குத் தேவையான “சார்ஜ்“. பாலியல் செயல்பாடுகள் அதிகரிக்கும்போது, ஆசையும் அதிகரிக்கிறது. இதைத்தான் “மூட்“ (Mood) என்போம். இந்த நேரத்தில், இதயத்துடிப்பு அதிகரிப்பது, மூச்சிரைப்பது, சருமம் சிவந்து போதல் எனச் சில மாற்றங்கள் ஏற்படும்.

தூண்டுதல் (சமநிலையான நிலை):

அதாவது தொடுதல், காட்சி, ஓசை, சுவை, மணம் அல்லது கற்பனை பெண்ணின் உடலில் மேலும் மாற்றங்களைக் கொண்டு வரும். பெண்ணுறுப்பில் சில திரவங்கள் சுரக்க ஆரம்பித்து, பெண்ணுறுப்பு, லேபியா மற்றும் வல்வா ஆகியவற்றை ஈரப்படுத்துகின்றன. பாலுறவுக்குத் தேவையான உயவை இது ஏற்படுத்தும். பெண்ணுறுப்பு விரிவாகி, க்ளிட்டோரிஸ் பெரிதாகும். மார்பகக் காம்புகள் கடினமாகவும் கூர்மையாகவும் மாறும்.

உச்சநிலை (கடைசிநிலை):

இந்தநிலையில், பெண்ணுறுப்பைச் சுற்றியிருக்கும் தசைகள் குறிப்பிட்ட இடைவெளியில் சுருங்கி, விரியும். இது ஒருவித இன்பான உணர்ச்சியைக் கொடுக்கும். இதுதான் பாலுறவில் கடைசிநிலை.

ரெசொல்யூஷன் (Resolution):

பாலுறுப்பு, க்ளிட்டோரிஸ் மற்ற பாகங்கள் அனைத்தும் சாதாரணநிலைக்குத் திரும்பும். அநேகமாக திருப்தியாகவும், அமைதியாகவும், தூக்கம் வருவதுபோலவும் உணர்வார்கள். ஒவ்வொரு பெண்ணும், தனக்கான வேகத்தில் இவற்றில் ஒவ்வொரு நிலையையும் கடக்கிறார். இந்த நிலைகளில் ஒன்றையோ, சிலவற்றையோ அடையாமல் போனாலோ, அடைவதில் பிரச்னை ஏற்பட்டாலோ, முழுமையாக ஏற்படாமல் இருந்தாலோ அது பாலியல் பிரச்சனையாகக் கருதப்படும்.

முந்தைய பகுதி: டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள் 08

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here