இவ்வார ராசிபலன்கள் (11.8.2019 – 17.8.2019)

ராகு, புதன், சுக்கிரன், சந்திரன் அனுகூல பலன் தருவர்.புதியவர்களின் அறிமுகமும் உதவியும் கிடைக்கும்.

முக்கியமான பணி எளிதாக நிறைவேறும். புதிய வாகனம் விரும்பியபடி வாங்கலாம். புத்திரர் படிப்பு, வேலையில் மனப்பூர்வமாக ஈடுபடுவர். பூர்வ சொத்தில் அளவான பணவரவு கிடைக்கும். சத்தான உணவு உண்பதால் உடல் ஆரோக்கியம் பலம் பெறும். மனைவி குடும்ப நலனில் அக்கறை கொள்வார். சுற்றுலா பயணத்தில் மாற்றம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். பணியாளர்கள் கடமையுணர்வுடன் பணிபுரிவர். பெண்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவர். மாணவர்கள் படிப்பில் அதிக தேர்ச்சி பெறுவர்.
பரிகாரம்: குரு வழிபாடு மங்கள வாழ்வு தரும்.

சுக்கிரன், செவ்வாய், சூரியன், குரு சுபபலன் தருவர்.செயல்களில் வசீகரம் இருக்கும். உடன்பிறந்தவர்களால் உதவி உண்டு.வெளியூர் பயணம் இனிய அனுபவம் தரும். புத்திரரின் எதிர்கால நலனுக்கு தேவையானதை செய்வீர்கள். எதிர்ப்பாளர் சொந்த சிரமங்களால் விலகுவர். மனைவியின் அன்பு, பாசம் மனதில் நெகிழ்ச்சியை தரும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி செய்வீர்கள்.பணியாளர்கள் புதிய தொழில் நுட்பம் அறிந்து கொள்வர்.பெண்கள் உறவினர் குடும்பத்தில் சுக நிகழ்ச்சி நடத்த உதவுவர். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் பயிற்சி தேவைப்படும்.

பரிகாரம்: சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

செவ்வாய், சுக்கிரன், சந்திரன் சுப பலன் தருவர். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும். மனம், செயலில் புத்துணர்வு ஏற்படும்.

பணிகள் எளிதாக நிறைவேறும். வீட்டில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். புத்திரர் பெற்றோரிடம் அதிக அன்பு, பாசம் கொள்வர். வழக்கு, விவகாரங்களில் சுமூக தீர்வு கிடைக்கும். மனைவி கருத்து ஒற்றுமையுடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரம் செழித்து லாப விகிதம் கூடும். பணியாளர்கள் அதிக தொழில் நுட்பம் அறிந்து கொள்வர். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் பயிற்சி பெறுவர்.
சந்திராஷ்டமம்: 13.8.19 காலை 10:49 மணி -15.8.19 இரவு 10:27 மணி
பரிகாரம்: விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.

குரு, சுக்கிரன், கேது, சனீஸ்வரர் அனுகூல அமர்வில் உள்ளனர். பொது இடங்களில் சூழல் உணர்ந்து செயல்படுவீர்கள்.

உடன்பிறந்தவர் அதிக அன்பு பாராட்டுவர். வாகன பயணம் இனிய அனுபவம் தரும். இஷ்டதெய்வ அருளால் முக்கியமான செயல் நிறைவேறும். புத்திரரின் நற்செயல் பெற்றோருக்கு பெருமை சேர்க்கும். வழக்கு, விவகாரத்தில் சுமூக தீர்வு கிடைக்கும். மனைவியின் அன்பு, பாசத்தில் மனம் நெகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் கடின உழைப்பினால் பணவரவு கூடும். பணியாளர்கள் பணி இலக்கை பூர்த்தி செய்வர். பெண்கள் பிரார்த்தனை நிறைவேறி தெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்கள் படிப்புடன் கலைகளும் பயில்வர்.
சந்திராஷ்டமம்: 15.8.19 இரவு 10:28 மணி – 17.8.19 நாள் முழுவதும்.
பரிகாரம்: அம்பிகை வழிபாடு மனதில் சாந்தம் தரும்.

ராகு, சுக்கிரன், சந்திரன் நற்பலன்களை வழங்குவர்.குடும்ப உறுப்பினர் ஆதரவாக நடந்து கொள்வர்.பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள்.வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றவும்.புத்திரர் படிப்பு ,வேலையில் முன்னேற்றம் காண்பர்.நேரத்திற்கு உண்பதால் ஆரோக்கியம் மேம்படும்.பணக்கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள்.மனைவியின் ஜாதகம் அதிர்ஷ்ட பலன் தரும்.தொழில்,வியாபாரத்தில் புதிய அணுகுமுறை ,வளர்ச்சியை உருவாக்கும்.பணியாளர்கள் கடமையுணர்வுடன் செயல்படுவர்.பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர்.மாணவர்கள் படிப்பு தவிர பிற விவாதம் பேச வேண்டாம்.

சந்திராஷ்டமம்: 4.7.18 இரவு 8:16 மணி -6.7.18 இரவு 4:06 மணி வரை
பரிகாரம்: மகாலட்சுமி வழிபாடு தொழிலில் வளர்ச்சி தரும்.

செவ்வாய், சுக்கிரன், சூரியன், புதன் அளப்பரிய நற்பலன் தருவர்.நிகழ்வுகள் சாதகமாக அமைந்திடும்.குழப்பம் விலகி பணிகளில் மனப்பூர்வமாக ஈடுபடுவீர்கள். தம்பி, தங்கை அன்பு,பாசத்துடன் பழகுவர். வாகனத்தின் பயன்பாடு அதிகரிக்கும். புத்திரர் உங்களின் வழிகாட்டுதலை முழு மனதுடன் ஏற்றுக்கொள்வர். பூர்வ சொத்தில் வளர்ச்சியும், பணவரவும் கூடும். மனைவி உங்களின் இன்ப துன்பத்தில் சமபங்கு கொள்வார். தொழில்,வியாபாரத்தில் அளப்பரிய வளர்ச்சி ஏற்படும். பணியாளர்கள் கூடுதல் வேலை வாய்ப்பை ஏற்றுக்கொள்வர். பெண்கள் உறவினர்களை நன்கு உபசரிப்பர்.மாணவர்களுக்கு படிப்பில் ஞாபகத்திறன் வளரும்.

பரிகாரம்: நரசிம்மர் வழிபாடு வெற்றி தரும்.

பெரும்பான்மை கிரகங்களால் நற்பலன் கிடைக்கும்.தாமதமான செயல்களில் முன்னேற்றம் ஏற்படும்.
விலகிய உறவினர் சொந்தம் பாராட்டுவர். வாகனத்தின் பயன்பாடு அதிகரிக்கும். புத்திரர் பெற்றோரின் சொல் கேட்டு நடப்பர்.குடும்பத்தில் வெகுநாள் இருந்த பிரச்னையின் தீவிரம் குறையும். அதிக நிபந்தனையுடன் பணம் கடன் பெற வேண்டாம்.மனைவியின் ஆர்வமிகு செயல் குளறுபடியாகலாம். தொழிலில் போட்டி குறைந்து உற்பத்தி ,விற்பனை அதிகரிக்கும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும்.பெண்கள் நகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம்.மாணவர்கள் படிப்பில் சிறந்து நண்பருக்கும் உதவுவர்.
பரிகாரம் : துர்கை வழிபாடு வெற்றியை தரும்.

சுக்கிரன் ,சந்திரனால் ஓரளவு நற்பலன் கிடைக்கும்.அக்கம் பக்கத்தவருடன் நிதானித்து பேசவும். இஷ்டதெய்வ அருளால் செயல் எளிதாக நிறைவேறும். தாய்வழி உறவினர்களின் உதவி கிடைக்கும்.வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். புத்திரர் மனதில் நம்பிக்கை வளரும். படிப்பு, வேலையில் முன்னேறுவர். பணக்கடன் தொந்தரவு குறையும். மனைவி கருத்திணக்கம் கொள்வார்.குடும்பத்தில் ஒற்றுமை நிலைத்திருக்கும். தொழில், வியாபாரத்தில் இடையூறு விலகி பணவரவு கூடும்.பணியாளர்கள் பொறுப்புணர்வுடன் பணிபுரிந்து சலுகை பெறுவர்.பெண்கள் இஷ்டதெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்கள் நன்றாக படிப்பர்.

பரிகாரம்: துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.

புதன், சுக்கிரன், சந்திரன் நற்பலன் வழங்குவர்.பழகுபவர்களின் மனம் உணர்ந்து பேசுவதால் நற்பலன் பெறலாம்.செயல்கள் அதிக முயற்சியால் நிறைவேறும். தாய்வழி உறவினர் உதவுவர். குடும்பத்தின் தேவை பூர்த்தியாகும்.புத்திரரின் அறிவு, செயல் திறன் பரிமளிக்கும். மனைவி கருத்திணக்கமுடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி செய்வீர்கள். அரசாங்க உதவி பெறலாம்.பணியாளர்கள் அதிகம் உழைத்து பணம் சேமிப்பர். பெண்கள் புத்தாடை, நகை வாங்குவர். மாணவர்கள் படிப்பில் முன்னேறுவர்.

பரிகாரம்: குரு வழிபாடு சுப வாழ்வு தரும்.

குரு, ராகு, சந்திரன் அதிர்ஷ்ட பலன் வழங்குவர்.மனதில் பல நாள் இருந்த கவலை நீங்கும்.
பணிகள் குறித்த காலத்தில் நிறைவேறும்.தம்பி, தங்கை வாழ்வு வளம் பெற உதவுவீர்கள். புத்திரர் பெற்றோரிடம் விரும்பிய பொருள் கேட்டு வாங்குவர்.இஷ்ட தெய்வ வழிபாடு சில நன்மையை தரும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மனைவி உங்களின் கருத்துகளை ஏற்றுக் கொள்வார்.தொழில், வியாபாரத்தில் அதிக மூலதனம் தேவைப்படும். பணியாளர்கள் சலுகையை கேட்பதில் நிதானம் பின்பற்ற வேண்டும்.பெண்களுக்கு உறவினர்களின் நன்மதிப்பு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் பயிற்சி பெறுவர்.
பரிகாரம்: மீனாட்சி வழிபாடு சகல நன்மை தரும்.

பெரும்பான்மை கிரகங்கள் அனுகூல அமர்வில் உள்ளனர்.பேச்சில் வசீகரம் மிகுந்திருக்கும். உறவினர்களிடம் நற்பெயர் பெறுவீர்கள்.புத்திரர் அறிவாற்றல், செயல்திறனில் மேம்படுவர். வழக்கு, விவகாரத்தில் சுமுக தீர்வு கிடைக்கும். நோய் தொந்தரவு குறையும். மனைவி விரும்பிக்கேட்ட பொருள் வாங்கி தருவீர்கள். தொழிலில் வளர்ச்சி அதிகரித்து கூடுதல் பணம் சேமிப்பாகும். பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிவர். பெண்கள் தாராள பணவரவில் நகை, புத்தாடை வாங்குவர். மாணவர்களுக்கு பரிசு, பாராட்டு கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: 4.8.19 மதியம் 2:27 மணி -6.8.19 மாலை 4:34 மணி
பரிகாரம்: பைரவர் வழிபாடு நன்மை தரும்.

செவ்வாய் ,சுக்கிரன், குரு ,சந்திரனால் தாராள நற்பலன் கிடைக்கும்.மனதில் தைரியம் நிறைந்திருக்கும்.

வீட்டில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். வாகனத்தில் பராமரிப்பு, பணச்செலவு கூடும்.புத்திரர் பெற்றோரின் பரிபூரண அன்பை பெறுவர். வழக்கு, விவகாரத்தில் சுமூக தீர்வு கிடைக்கும். மனைவியின் அன்பான வார்த்தை மனதில் நம்பிக்கையை தரும். தொழில் ,வியாபாரத்தில் அரசு உதவி புதிய முயற்சியால் கிடைக்கும்.பணியாளர்கள் ஆர்வமுடன் பணி புரிந்து முன்னேறுவர்.பெண்கள் கணவரின் அன்பு, பாசத்தில் சந்தோஷ வாழ்வு நடத்துவர். மாணவர்கள் நன்றாக படித்து பரிசு ,பாராட்டு பெறுவர்.
பரிகாரம் : சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here