பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருந்த கும்பல் கைது!

ஒன்றராரியோவில் பல பெண்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்தி, பணம் சம்பாதித்து வந்த 15பேர் கொண்ட குழுவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் பல பெண்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்தியுள்ளதாகவும், எனினும் எத்தனை பெண்கள் இவ்வாறு பாதிப்புகளுக்கு உள்ளானார்கள் என்ற உறுதியான விபரங்கள் இன்னமும் கிடைக்கவில்லையெனவும் விசாரணை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதுதவிர குறித்த குழு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைதுசெய்யப்பட்டவர்கள் மீது சுமார் 200 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது ஒரு மில்லியன் டொலர்களுக்கும் மேலான பெறுமதி உடைய 12.5 கிலோகிராம் கொக்கெய்ன் போதைப் பொருள் உள்ளிட்ட மேலும் பல போதைப் பொருட்கள் மற்றும் மாத்திரைகளைக் கைப்பற்றியுள்ளனர்.

11 துப்பாக்கிகள், மேலும் சில கைத்துப்பாக்கிகள் போன்றவையும் இந்த சிறப்பு நடவடிக்கையின்போது மீட்கப்பட்டுள்ளன.

இந்தக் குழுவில் இருந்தோர் ஒன்ராறியோவின் பல பகுதிகளிலும் உயர்ரக உந்துருளிகளை வைத்திருக்கும் முக்கிய புள்ளிகள் என்றும் கூறப்படுகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here