காஷ்மீர் தொடர்பான மஹிந்தவின் கருத்திற்கு இந்தியா கடும் அதிருப்தி தெரிவித்தது!

இந்தியாவின் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அண்மையில் மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்த கருத்திற்கு, இந்திய தூதரகம் தனது கடுமையான அதிருப்தியை மஹிந்த தரப்பிற்கு தெரிவித்துள்ளதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.

கொழும்பிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் பசில் ராஜபக்சவிடம் தொலைபேசி வழியாக தமது அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

வீரகேசரி பத்திரிகைக்கு சில தினங்களின் முன்னர் வழங்கிய செவ்வியில், காஷ்மீர் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். தமிழ் மக்களின் பிரச்சனை தொடர்பாக குறிப்பிடும்போது, காஷ்மீர் விவகாரத்தையும் ஒப்பிட்டு பேசினார். காஷ்மீர் மக்கள் தனிநாட்டு கோரிக்கையை முன்வைத்தமையினாலேயே அவர்களின் சிறப்பு அந்தஸ்தை இந்தியா இரத்து செய்திருந்தது என்ற சாரப்பட தெரிவித்திருந்தார். தமிழ் மக்களும் இந்த யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டுமென்ற சாரப்பட தெரிவித்திருந்தார்

இந்த கருத்தை ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன.

மஹிந்த ராஜபக்சவின் கருத்து இந்திய அரசை கடுமையான அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. கொழும்பிலுள்ள இந்திய தூதரகம், மஹிந்த தரப்பை தொலைபேசியில் அழைத்து தமது அதிருப்தியை தெரிவித்துள்ளன.

பசில் ராஜபக்சவுடன் பேசிய இந்திய தூதரக அதிகாரிகள், தமது அதிருப்தியை தெரிவித்துள்ளனர். காஷ்மீர் தொடர்பான இந்தியாவின் நடவடிக்கை, மஹிந்த ராஜபக்ச சொன்ன அர்த்தத்தில் இந்தியாவால் மேற்கொள்ளப்படவில்லை, மஹிந்தவின் கருத்தின்படி காஷ்மீர் மக்களை இந்தியா அடிமைப்படுத்தியுள்ளதை போன்ற கருத்தை ஏற்படுத்துகிறது, வேறு சில அரசியல் காரணங்களினாலேயே இந்தியா அந்த நடவடிக்கையை எடுத்தது என இந்தியா தரப்பு தெரிவித்துள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here