நாளை கோத்தாபய வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் வடக்கிலும் வெடிகொளுத்த ஏற்பாடு!

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாளை அறிவிக்கப்படவுள்ளார்.

சுகததாச அரங்கில் பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு நாளை (11) நடைபெறுகிறது. இதன்போது, பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை மஹிந்த அறிவிப்பார்.

கோத்தாபய ராஜபக்சதான் பெரமுனவின் வேட்பாளராக நாளை அறிவிக்கப்படுகிறார். இதையொட்டி, சில சூட்சுமமான ஏற்பாடுகளையும் பெரமுன மேற்கொண்டுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய அறிவிக்கப்பட்டதும், மக்கள் இயல்பாக வெடி கொளுத்துவதை போன்ற ஏற்பாடுகள் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கிலும் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. யாழில் இன்று பெரமுன அலுவலகத்தில் இதற்கான இறுதிக்கட்ட தயாரிப்புக்கள் செய்யப்பட்டன.

ஒவ்வொரு பிரதேசத்திற்கும் வெடிகொளுத்துபவர்களும், பணமும் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. கோத்தாபய வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், நாளை யாழிலும் சிலர் வெடிகொளுத்துவார்கள்!

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here