UPDATE: கடும் மோதலின் பின் நாடாளுமன்றத்திற்குள் டக்ளஸ்- சிறிதரன் சுவாரஸ்ய உரையாடல்!

ஈ.பி.டி.பியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிற்குமிடையில் கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்திற்குள் நடக்கும் வார்த்தைப் போர் வைரலாக பரவியது.

மாத இறுதி அமர்வில் சிறிதரன் உரையாற்றியபோது, செம்மணி புதைகுழி மற்றும் மண்டைதீவு படுகொலை என்பவற்றிற்கும் டக்ளஸ் தேவானந்தா சாட்சியமளிக்க வேண்டுமென்றார்.

நேற்று முன்தினம், நாடாளுமன்றத்தில் இதற்கு பதலளித்த டக்ளஸ் தேவானந்தா, செஞ்சிலுவை சங்க வாகனத்தில் நகைகளுடன் சிறிதரன் தப்பி வந்தார், செஞ்சோலையை காட்டிக்கொடுத்தார் என காரசாரமாக குற்றம் சுமத்தியிருந்தார். இருவரின் உரைகளும் சமூக வலைத்தளங்களில் அதிகம் கவனிக்கப்பட்டன.

இந்த நிலையில், நேற்று டக்ளஸூம், சிறிதரனும் நேருக்கு நேர் சந்தித்தபோது சுவாரஸ்யமான உரையாடல் இடம்பெற்றது.

நாடாளுமன்றத்திற்குள் இருவரும் எதேச்சையாக நேருக்கு நேர் சந்தித்து கொண்டனர்.

அப்போது, சிறிதரனை பார்த்து, நாடாளுமன்றத்தில் உரையாற்றவில்லையா? தனது பேச்சிற்கு பதிலளிக்கவில்லையா? என நகைச்சுவையாக கேட்டுள்ளார்.

இன்னொரு சந்தர்ப்பத்தில் தான் பதிலளிப்பதாக சிறிதரனும் சிரித்தபடி கூறினார்.

இருவரும் நகைச்சுவையாக சில விசயங்களை பேசிக் கொண்டனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here