மஹிந்தவிடம் சென்றவர்கள் கூட்டமைப்பு உறுப்பினர்கள் அல்ல; கூட்டணி உறுப்பினர்களே!

மட்டக்களப்பிலிருந்து சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சிலர், மஹிந்த ராஜபக்சவை நேற்று சந்தித்தார்கள் என செய்திகள் வெளியாகியிருந்தன.

இதையடுத்து, சமூக ஊடகங்களிலும் அந்த செய்தி பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

எனினும், அந்த செய்தி தவறானது. அந்த சந்திப்பில் கலந்து கொண்ட யாருமே தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் கிடையாது என்பதை தமிழ்பக்கம் சுயாதீனமாக உறுதி செய்தது. அந்த குழுவில் இருந்தவர்கள் இருவர் மட்டுமே பிரதேசசபை உறுப்பினர்கள்.

வவுணதீவு பிரதேசசபை சேர்ந்த இருவர் மட்டுமே பிரதேசசபை உறுப்பினர்கள். எஞ்சியவர்கள் உள்ளூர் இளைஞர்கள் ஆவர்.

மஹிந்தவிடம் சென்ற பிரதேசசபை உறுப்பினர்கள் இருவரும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர்கள். ஈ.பி.ஆர்.எல்.எவ் மட்டக்களப்பு பிரமுகர் இரா.துரைரெட்ணத்தினால் வேட்பாளர்களாக நியமிக்கப்பட்ட உள்ளூர் இளைஞர்களே அவர்கள்.

இப்பொழுது இதில் எழும் சுவாரஸ்ய கேள்வி என்னவென்றால், தாம் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் என இவர்கள் மஹிந்த ராஜபக்சவின் காதில் பூ சுற்றினார்களா? அல்லது, தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், தமிழர் விடுதலை கூட்டணிக்குமிடையில் மஹிந்த வித்தியாசம் காண முடியாமலிருந்தாரா என்பதே.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here