மாலையில் வெளியானது கொலையுதிர் காலம்

தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகை, அதிக சம்பளம் வாங்கும் நடிகை எனப் பெயரெடுத்தவர் நடிகை நயன்தாரா. இவர், நடித்த கொலையுதிர் காலம் படம் 9 முறை ரிலீஸ் திகதி தள்ளி வைக்கப்பட்டது.

தயாரிப்பில் சர்ச்சை, இசையமைப்பாளரில் சர்ச்சை, டிரைலர் வெளியீட்டு விழாவில் சர்ச்சை, தலைப்பில் சர்ச்சை என தொடர் சர்ச்சைகளுடன் கொலையுதிர் காலம் இன்று (9) வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், படம் திட்டமிட்டபடி இன்று காலை வெளியாகவில்லை. தயாரிப்பாளருக்கு கடைசி நேரத்தில் ஏற்பட்ட ரூ.1.50 கோடி நிதி பிரச்னை காரணமாக ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் அந்த பிரச்னைகளும் எல்லாம் ஒருவழியாக தீர்க்கப்பட்டு மாலையில் வெளியானது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here