முதல் டெஸ்ட்டுக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டது!

நியூசிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை இன்று காலை அணி விபரத்தை வெளியிட்டது.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. முதலாவது போட்டிக்காண அணியே அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட அணியில், சிறிய இடைவெளியின் பின் மத்யூஸ், சந்திமல் டெஸ்ட் குழாமிற்கு திரும்பியுள்ளனர்.

முதல் போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதி காலி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

15 பேர்கொண்ட அணி விவரம்

திமுத் கருணாரத்ன (தலைவர்), அஞ்சலோ மத்யூஸ், தினேஷ் சந்திமால், நிரோஷன் டிக்வெல்ல, லஹிரு திரிமான்ன, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், தனஞ்ஜெய டி சில்வா, லசித் எம்புல்தெனிய, அகில தனஞ்ஜெய, சுரங்க லக்மால, லக்ஷான் சந்தகன், லஹிரு குமார, விஷ்வ பெர்னாண்டோ, ஓசத பெர்னாண்டோ.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here