காரைதீவில் கிறீஸ்மரத்தின் உச்சியிலிருந்து விழுந்தவர் 50 நாளின் பின் மரணமானார்!

காரைதீவில் இடம்பெற்ற சித்திரைப்புத்தாண்டு விளையாட்டுவிழாவில் கிறீஸ் மரம் ஏறிய போது சறுக்கி வீழ்ந்த வீரர் 50 நாட்களின் பின்னர் மரணமானார்.

காரைதீவைச் சேர்ந்த சாமித்தம்பி தவராசா (வயது41) என்பவரே இவ்விதம் மரணமானார்.

சித்திரைவருட பாரம்பரிய விளையாட்டுவிழா காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நடைபெற்றபோது கிறீஸ் மரம் ஏறும் போட்டி இம்முறையும் நடந்தது. வழமையாக கிறீஸ்மரம் ஏறும் போட்டி நடப்பதும், அப்போதெல்லாம் அவர் அந்த போட்டியில் கலந்து கொள்வதும் குறிப்பிடத்தக்கது.

கிறீஸ் மரத்தின் உச்சத்திற்கு ஏறி, கடைசிக்கட்டத்தில் கிறீசை துடைத்தெறிந்துவிட்டு கட்டியிருந்த கயிற்றை எட்டிப்பிடிக்க, பிடி தவறியதும் அந்தரத்தில் பலரும் பார்த்திருக்க தரையில் தொப்பென்று வீழ்ந்தார்.

எலும்புகள் முறிந்த நிலையிலும் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையிலும் அவரை உடனே கல்முனை ஆதாரவைத்தியசாலையில் அனுமதித்தனர்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு சுமார் 48 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், அவரை காப்பாற்ற முடியாத நிலையில், வீட்டாரின் சம்மதத்துடன் இறுதியில் வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். வீட்டில் வைத்து அரவது உயிர் பிரிந்திருக்கின்றது

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here