போட்டியின் இடையில் கேக் வெட்டிய வில்லியம்சன்!

இலங்கை கிரிக்கெட் தலைவர் அணிக்கும், நியூசிலாந்து அணிக்குமிடையிலான பயிற்சி ஆட்டத்தின் இடையில், நியூசிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சனின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்த சுவாரஸ்யம் இடம்பெற்றுள்ளது.

ஆட்டம் நடந்து கொண்டிருந்தபோது, இலங்கை ரசிகர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார் வில்லியம்சன்.

நேற்று (8) வில்லியம்சனின் 29வது பிறந்தநாள்.

இலங்கைக்கு பயணம் செய்துள்ள நியூசிலாந்து அணி, இலங்கை தலைவர் பதினொருவர் அணியுடன் கட்டுநாயக்கவில் 3நாள் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதன்போது, பாரவையாளர் பக்கமிருந்த இலங்கை ரசிகர்கள், கேக் வெட்ட தயாரானபோது, மைதானத்தில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த வில்லியம்சன் அவர்கள் பக்கம் வந்து கேக் வெட்டி ரசிகர்களுக்கு ஊட்டி விட்டார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here