ஈழப்போராட்டம் தொடர்பான மூன்று முக்கிய நூல்களின் அறிமுக நிகழ்வு!

ஈழப்போராட்டம் தொடர்பான மூன்று முக்கிய நூல்களின் அறிமுக நிகழ்வு பிரித்தானியாவில் இடம்பெறவுள்ளது. ஈழப்போராட்டம் தொடர்பான நூல்களை வெளியிட்டு, வரலாற்று ஆவணமாக்கலில் முக்கிய பணியாற்றும் வடலி பதிப்பகம் இந்த நூல்களை  வெளியிடுகிறது.

தமிழீழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான தோழர் ரகுமான் ஜான் தொகுத்த மூன்று நூல்கள் வெளியாகின்றன. ஈழப்போராட்டத்தின் கோட்பாட்டு அரசியல் பிரச்சினைகள், ஈழப்போராட்டத்தின் மூலோபாய, தந்திரோபாய பிரச்சினைகள், ஈழப்போராட்டத்தின் அமைப்புத்துறை சார்ந்த பிரச்சினைகள் ஆகிய நூல்களே வெளியாகின்றன.

தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்று ஆர்வலர்களிற்கும், செயற்பாட்டாளர்களிற்கும் பயனளிக்கக்கூடிய முக்கிய நூல்கள் இவையாகும்.

இந்த நிகழ்வு முக்கியமான ஒரு அரசியல், சமூக நிகழ்வாகும். நூல்களின் தொகுப்பாசிரியர் ரகுமான் ஜான் இந்த நிகழ்வில் நடைபெறும் கலந்துரையாடலில் பங்கேற்கிறார்.

ஓகஸ்ட் 17ம் (சனி) திகதி மாலை 3 மணிக்கு, Trinity Centre Eastham -London இல் நிகழ்வு இடம்பெறும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here