அழைத்தாலும் ஐ.பி.எல் போட்டியில் ஆட மாட்டேன்- அப்ரிடி

இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் விளையாட என்னை அழைத்தால் கூட நான் விளையாமாட்டேன் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அப்ரிடி கடந்த சில நாட்களுக்கு முன் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ், கவுதம் கம்பீர் கேப்டன் விராட் கோலி, ரெய்னா ஆகியோர் அவருடன் தகராற்றிற்கு போனார்கள்.  அந்த பரபரப்பு அடங்குவதற்குள், மீண்டும் அடுத்த கருத்தை அப்ரிடி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் இருந்து ஒளிபரப்பாகும் ஒரு செய்தி சனலுக்கு அப்ரிடி நேற்று பேட்டி அளித்திருந்தார். அப்போது அவரிடம் இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டிக்கு உங்களை விளையாட அழைத்தால் செல்வீர்களா என நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் பதில் அளிக்கையில்,

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி, இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டியைக் காட்டிலும் எதிர்காலத்தில் மிகப்பெரியதாக உருவாகும். ஐபிஎல் போட்டி நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் என்னை விளையாட அழைத்தால் கூட நான் ஐபிஎல் போட்டிக்கு வரமாட்டேன். எங்கள் நாட்டில் நடக்கும் பிஎஸ்எல் போட்டிதான் மிகப்பெரியது, விரைவில், ஐபிஎல் போட்டியை எங்களுடைய பிஎஸ்எல் போட்டி பின்னுக்குத் தள்ளும்.

இப்போதுள்ள நிலையில் நான் பிஎஸ்எல் போட்டியில் விளையாடுவதைத்தான் விரும்புகிறேன். ஐபிஎல் போட்டி எனக்கு தேவையில்லை. அதில் விளையாடவும் ஆசையில்லை, ஒருபோதும் ஆசைப்பட்டதும் இல்லை.

இவ்வாறு அப்ரிடி தெரிவித்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here