குழந்தைகளிற்காகவே சரவணன் வெளியேறினார்!

குடும்பத்தை பார்க்க வேண்டும் என்பதற்காகத் தான் சரவணன் வெளியில் சென்றதாக நடிகர் பரணி தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று முன்தினம் சரவணன் அதிரடியாக வெளியேற்றப்பட்டார். பேருந்தில் பெண்களை உரசியதாக அவர் கூறியது தொடர்பாக பிக் பாஸ் இந்த நடவடிக்கையை எடுத்தார். ஏற்கனவே இந்த விவகாரத்தில் சரவணன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டிருந்த போதும், இப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு நெட்டிசன்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

இதனால் நேற்று தேசிய அளவில் சரவணன் பிரச்சினை டுவிட்டரில் டிரெண்டிங் ஆனது. சரவணனுக்கு ஆதரவாக பலரும் டுவீட் செய்தனர். விஜய் டிவி சரவணனை அவமானப்படுத்தி விட்டதாக அவர்கள் ஆதங்கப்பட்டனர்.

ஆனால், இந்தப் பிரச்சினைக்காக அல்ல, தன் குழந்தைக்காகவே சரவணன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது தற்போது தெரிய வந்துள்ளது. பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளரான பரணி, இது தொடர்பாக சரவணனிடம் போனில் பேசியுள்ளார். அப்போது அவர் இந்தத் தகவலை சரவணன் கூறியுள்ளார்.

குழந்தையின் ஞாபகமாக இருந்ததால், வெளியேறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே அவர் பிக்பாஸிடம் அவர் வீட்டிற்கு செல்ல வேண்டும் என கேட்டு வந்துள்ளார். எனவே, இந்தக் காரணத்தைக் கூறி அவரை வெளியில் அனுப்பி விட்டதாக பரணி தெரிவித்துள்ளார். மேலும், தற்போது தனது வீட்டில் குழந்தையுடன் சரவணன் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பரணியின் இந்தப் பேட்டியால் பிக் பாஸ் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். அப்படியென்றால், டிஆர்பிக்காகத் தான் பிக் பாஸ் பிரச்சினையை வேறு மாதிரி திருப்பினாரா எனவும் அவர்கள் கோபமடைந்துள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here