இந்தவார ராசிபலன்கள் (6.10.2019 – 12.10.2019)

சூரியன், செவ்வாய், ராகு, சந்திரனால் நற்பலன் கிடைக்கும்.,உங்கள் பேச்சில் வசீகரம் உருவாகும். தம்பி, தங்கை அதிக பாசம் கொள்வர். புத்திரர் படிப்பு, வேலையில் முன்னேற்றம் காண்பர். இஷ்டதெய்வ அருளால் குடும்ப விவகாரம் சுமூக தீர்வுக்கு வரும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். மனைவியின் உடல் நலத்தில் கவனம் வேண்டும். தொழிலில் உற்பத்தி, விற்பனை செழிக்கும். பணியாளர்கள் சுறுசுறுப்புடன் பணிபுரிவர். பெண்கள் தாய் வீட்டுக்கு உதவுவர். மாணவர்கள் படிப்பில் கூடுதல் பயிற்சி பெறுவர்.

பரிகாரம் : பெருமாள் வழிபாடு நல்வாழ்வு தரும்.

புதன், குரு, சந்திரனால் நன்மை கிடைக்கும். நண்பர்களிடம் பேசுவதில் நிதானம் வேண்டும். சமூக நிகழ்வு மாறுபட்ட அனுபவம் தரலாம். வாகனத்தில் மிதவேகம் நல்லது. புத்திரர் பெற்றோரின் வழிகாட்டுதல் ஏற்று செயல்படுவர். எதிரியால் உருவான செயல் பலமிழக்கும். மனைவியின் ஆர்வமிகு செயல் குளறுபடியாகலாம். விரும்பிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அளவான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணியிட சூழல் உணர்ந்து செயல்படவும். பெண்கள் நகை இரவல் கொடுக்க, வாங்க கூடாது. மாணவர்கள் பாதுகாப்பற்ற இடங்களில் செல்ல வேண்டாம்.

சந்திராஷ்டமம்: 6.10.19 காலை 6:00 மணி – பகல் 2:23 மணி
பரிகாரம் : மீனாட்சி வழிபாடு சகல வளமும் தரும்.

சுக்கிரன், சந்திரன் ஓரளவு நற்பலன் வழங்குவர். வாழ்வில் முன்னேற்றத்திற்கான வழிகளை தேடுவீர்கள். உங்களை புகழ்ந்து பேசுபவரிடம் கவனம் வேண்டும். வாகன பராமரிப்பு பயணத்தை இனிதாக உருவாக்கும்.

புத்திரரின் எண்ணங்களை புரிந்து கொண்டு அவர்களின் செயல்களில் மாற்றம் வர உதவுங்கள். குடும்பத்திற்கான பண செலவு அதிகரிக்கும். நோய் தொந்தரவு குறைய மருத்துவ சிகிச்சை நல்ல பலன் தரும். மனைவி வழி சார்ந்த உறவினர் அதிக அன்பு பாராட்டுவர். தொழிலில் புதிய உத்தியால் உற்பத்தி, விற்பனை கூடும். பணியாளர்கள் பணி திறனில் மேம்படுவர். பெண்கள் பணம் சேமிப்பதில் ஆர்வம் கொள்வர். மாணவர்கள் வெளியிடம் சுற்றுவதை குறைக்கவும்.

பரிகாரம் : பசு வழிபாடு சகல வளமும் தரும்.

பெரும்பான்மை கிரகங்களால் ராஜயோக பலன் கிடைக்கும். சமூகத்தில் பெற்ற நற்பெயரை பாதுகாத்து கொள்வீர்கள். வாழ்வில் முன்னேற புதிய வாய்ப்பு வரும். உடன் பிறந்தவர்களுக்கு சுப நிகழ்ச்சி நடந்தேறும். புத்திரரின் செயல் சிறப்பாக அமைந்து மகிழ்ச்சியை தரும். பிரச்னையில் சுமூக தீர்வு கிடைக்கும். மனைவியின் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் போட்டி குறைந்து பணவரவு கூடும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள் படிப்புடன் கலைகளும் பயில்வர்.

சந்திராஷ்டமம் : 9.10.19 பகல் 12:39 மணி – 11.10.19 இரவு 12:11 மணி
பரிகாரம்: நாகதேவதை வழிபாடு நன்மை தரும்.

சுக்கிரன், ராகு, சந்திரனால் அதிக நன்மை ஏற்படும். பணி நிறைவேற உத்வேகமுடன் செயல்படுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். புத்திரர் சில விஷயங்களில் பிடிவாதம் கொள்வர். விவகாரங்களில் சுமூக தீர்வு பெற மாற்று உபாயம் உதவும். மனைவியின் ஆலோசனை மனதில் நம்பிக்கையை உருவாக்கும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். பணியாளர்கள் அதிக வேலை வாய்ப்பை ஏற்று கொள்வர். பெண்கள் பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள் வெளியிடம் சுற்றுவதை குறைக்கவும்.

சந்திராஷ்டமம்: 11.10.19 இரவு 12:12 மணி – 12.10.19 நாள் முழுவதும்.
பரிகாரம்: சிவன் வழிபாடு தொழிலில் வளர்ச்சி தரும்.

சுக்கிரன், சந்திரன் நற்பலன் வழங்குவர். எவரிடமும் நிதானித்து பேசுவீர்கள். உறவினர் உதவி கிடைக்கும். குடும்பத்திற்கான பண செலவில் சிக்கனம் நல்லது. வீடு, வாகனத்தில் பாதுகாப்பு பின்பற்றவும். புத்திரரின் சொல்லும், செயலும் குளறுபடியாகலாம். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். மனைவியின் உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். தொழில், வியாபாரத்தில் அளவான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணியிட சூழல் உணர்ந்து செயல்படவும். பெண்கள் குடும்ப விஷயம் பிறரிடம் பேச வேண்டாம். மாணவர்கள் படிப்பில் கவனம் வேண்டும்.

பரிகாரம் : தன்வந்தரி வழிபாடு ஆரோக்கியம் தரும்.

சுக்கிரன், குரு, கேது, சனீஸ்வரரால் வியத்தகு அளவில் நன்மை உண்டாகும். தெய்வ நம்பிக்கை மனதில் நல்ல மாற்றம் தரும். செயல்கள் சிறப்பாக அமையும். வாகன பயணம் அளவுடன் மேற்கொள்வீர்கள். தாயின் மன குறையை அறிந்து சரி செய்வீர்கள். புத்திரரின் நற்செயல் பெருமையை தேடி தரும். மனைவியின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை செழித்து ஆதாய பண வரவு கிடைக்கும். பணியாளர்கள் பணி இலக்கை எளிதில் நிறைவேற்றுவர். பெண்கள் புத்தாடை, நகை வாங்குவர். மாணவர்கள் படிப்பில் அதிக மதிப்பெண் பெறுவர்.

பரிகாரம்: அம்பிகை வழிபாடு சுப வாழ்வு தரும்.

செவ்வாய், சூரியன் சுக்கிரன் சந்திரனால் ஆதாய பலன் கிடைக்கும். தம்பி, தங்கை அதிக அன்பு பாராட்டுவர். அறிமுகமில்லாதவருக்கு வீடு, வாகனத்தில் இடம் தர கூடாது. புத்திரர் எண்ணம், செயலில் புத்துணர்வு பெறுவர். நோய் தொந்தரவு குறைந்து ஆரோக்கியம் பலம் பெறும். மனைவி வழி சார்ந்த உறவினர் உதவுவர். தொழில், வியாபாரத்தில் அளப்பரிய முன்னேற்றம் உருவாகும். பணியாளர்கள் கேட்ட கடனுதவி கிடைக்கும். பெண்கள் குடும்ப நலன் பேணி பாதுகாத்திடுவர். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற நண்பரால் உதவி உண்டு.

பரிகாரம் : துர்கை வழிபாடு சகல நன்மை தரும்.

குரு, சுக்கிரன், சூரியன், புதன் அதிர்ஷ்ட பலன் வழங்குவர். தாயின் அன்பு, ஆசி மனதில் புத்துணர்வு தரும். பணிகளில் நேர்த்தி உருவாகும். புத்திரர் பெற்றோரின் வார்த்தையை ஏற்று செயல்படுவர். சொத்தின் பேரில் அதிக பணம் கடன் பெற வேண்டாம். எதிரியால் உருவான செயல் பலமிழக்கும். மனைவியின் ஜாதகம் அதிர்ஷ்டகரமான பலன் தரும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் அக்கறையுடன் பணிபுரிவர். பெண்கள் உறவினர் குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த உதவுவர். மாணவர்கள் படிப்பில் சிறந்து நண்பருக்கும் உதவுவர்.

பரிகாரம்: விநாயகர் வழிபாடு சங்கடம் போக்கும்.

ராகு, புதன், குரு, சந்திரன் அனுகூல அமர்வில் உள்ளனர். புதியவர்கள் அன்பு, பாசத்துடன் உதவுவர். மனதில் புத்துணர்வு பிறக்கும். பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயணம் இனிய அனுபவம் தரும். புத்திரர் உங்கள் வழிகாட்டுதலை தயக்கத்துடன் ஏற்று கொள்வர். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். எதிரி இடம் மாறுகின்ற நன்னிலை உண்டு. மனைவி கருத்திணக்கம் கொள்வார். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். தொழில், வியாபாரம் செழித்து நிலுவை பணமும் வரவாகும். பணியாளர்களுக்கு சலுகையும், விண்ணப்பித்த கடனுதவியும் கிடைக்கும். பெண்கள் குடும்ப நலன் பேணி காத்திடுவர். மாணவர்கள் நன்கு படித்து பரிசு பெறுவர்.

பரிகாரம்: குரு வழிபாடு நம்பிக்கை தரும்.

சுக்கிரன், கேது, சனீஸ்வரர், சந்திரனால் நற்பலன் கிடைக்கும்.,வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள்.,உடன்பிறந்தவர் அதிக அன்பு பாராட்டுவர். வாகனத்தின் பயன்பாடு அதிகரிக்கும். புத்திரர்கள் படிப்பு, வேலையில் முன்னேற்றம் காண்பர். தாய் விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள். மனைவி கருத்திணக்கம் கொள்வார். வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகும். தொழில், வியாபாரம் செழித்து வளரும். பணியாளர்கள் சிறப்பாக பணி புரிந்து பாராட்டு, வெகுமதி பெறுவர். பெண்கள் கலையம்சம் நிறைந்த பொருள் வாங்குவர். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.

பரிகாரம்: முருகன் வழிபாடு தைரியம் வளர்க்கும்.

புதன், குரு, சுக்கிரன், சந்திரன் தாராள அளவில் நற்பலன் தருவர். மன உறுதியுடன் பணிகளை செயல்படுத்துவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி அதிகரிக்கும். புத்திரர் ஆடம்பர பொருள் வாங்க ஆர்வம் கொள்வர். எதிர்ப்பாளர் மறைமுகமாக இடையூறு செய்வர். மனைவியின் மனதில் நம்பிக்கை வளர்ந்திடும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரம் செழித்து அளப்பரிய லாபம் கிடைக்கும். பணியாளர்கள் சிறப்பாக பணி புரிந்து சலுகை பெறுவர். பெண்கள் பணம் சேமிப்பில் ஆர்வம் கொள்வர். மாணவர்கள் படிப்பில் முன்னேறுவர்.

பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு வெற்றியளிக்கும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here