கிளிநொச்சி ஆனந்தபுரம் சிறி மீனாட்சி அம்மனுக்கு பூப்புனித நீராட்டு விழா

கிளிநொச்சி ஆனந்தபுரம் சிறி மீனாட்சி அம்மனுக்கு பூப்புனித நீராட்டு விழா நிகழ்வு கடந்த சனிக்கிழமை அம்பாள் பூப்படைந்த பூர நட்சத்திர நாளில் இடம்பெற்றது.

சனிக் கிழமை பிற்பகல் நான்கு மணிக்கு கிளிநொச்சி கண்ணன் ஆலயத்திலிருந்து சீர் எடுத்துச்செல்லப்பட்டு மீனாட்சி அம்மனுக்கு பூப்புனித நீராட்டு விழா சிறப்பாக மாலை நடத்தப்பட்டு விசேட பூசை வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.

ஆலய பரிபாலன சபையினரின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here