இலங்கையணியின் தற்காலிக பயிற்சியாளராக ஜெரோம் ஜெயரட்ண!

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தற்காலிகமாக ஜெரோம் ஜெயரட்ன நியமிக்கப்படவுள்ளார். தற்போதைய பயிற்சியாளர் ஹத்துருசிங்கவுடன் நடந்த நீண்ட பேச்சுக்கள் தோல்வியடைந்ததை தொடர்ந்து, இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. ஜெரோம் ஜெயரட்ண தற்போது தலைமை நடவடிக்கை அலுவலராக பணியாற்றுகிறார்.

கிரிக்கெட் நிர்வாகத்தின் சந்திப்பின் போது, ஹத்துருசிங்கவின் அண்மைய அறிக்கைகள் தொடர்பாக நீண்டநேரம் விவாதிக்கப்பட்டுள்ளது. ஹத்துருசிங்க தொடர்பான தனது முடிவை இன்று இலங்கை கிரிக்கெட் அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளது.

அவரது ஒப்பந்தத்தை இரத்து செய்யும் முடிவிற்கு இலங்கை கிரிக்கெட் வந்துள்ளதாக தெரிகிறது. முன்னதாக, பங்களாதேஷ் அணியுடனான போட்டிகளுக்குப் பிறகு தலைமை பயிற்சியாளர் ஹத்துருசிங்க உள்ளிட்ட பயிற்சியாளர் குழாம் நீக்கப்பட வேண்டும் என்று விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இலங்கை கிரிக்கெட்டுக்கு தெரிவித்திருந்தார். இலங்கை கிரிக்கெட்டின் செயற்குழு அடுத்த நியூசிலாந்து சுற்றுப்பயணம் வரை பயிற்சியாளர் குழாமை தக்க வைத்துக் கொள்ளுமாறு விளையாட்டு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

தற்போது, ஹத்துருசிங்கத்தை நீக்க இலங்கை கிரிக்கெட் முடிவு செய்துள்ளது. நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கு தலைமை பயிற்சியாளராக ஹத்துருசிங்கவை பயன்படுத்த வேண்டாம் என்று விளையாட்டு அமைச்சர் நேற்று கிரிக்கெட் சபைக்கு தெரிவித்திருந்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here