இந்தவார ராசி பலன்கள் (4.8.2019- 10.8.2019)

புதன், சுக்கிரன், ராகு ,சந்திரனால் நற்பலன் கிடைக்கும்.மன உறுதியுடன் முக்கிய பணிகளை நிறைவேற்றுவீர்கள்.தம்பி, தங்கைக்கு உதவுவீர்கள்.புத்திரர் எதிர்கால வாழ்வுக்கு தேவையானதை செய்வீர்கள். பூர்வ சொத்தில் பணவரவு அதிகரிக்கும். எதிர்ப்பாளர் உங்களின் நல்ல எண்ணங்களை புரிந்து கொள்வர்.உடல் ஆரோக்கியம் பெறும்.குடும்பத்துடன் சுற்றுலா சென்று வர திட்டமிடுவீர்கள். மனைவி வழி சார்ந்த உறவினர் அன்பு பாராட்டுவர்.தொழில், வியாபாரம் செழித்து வளரும். பணியாளர்கள் ஆர்வமுடன் பணி புரிந்து சலுகை பெறுவர். பெண்கள் மகிழ்ச்சிகர வாழ்வு நடத்துவர்.மாணவர்களுக்கு படிப்பில் ஞாபகத்திறன் வளரும்.

சந்திராஷ்டமம்: 8.8.19 இரவு 9:13 மணி-10.8.19 இரவு 3:12 மணி
பரிகாரம்: சாஸ்தா வழிபாடு நல்வாழ்வு தரும்.

சுக்கிரன், செவ்வாய், சூரியன், குரு சுபபலன் தருவர்.செயல்களில் வசீகரம் இருக்கும். உடன்பிறந்தவர்களால் உதவி உண்டு.வெளியூர் பயணம் இனிய அனுபவம் தரும். புத்திரரின் எதிர்கால நலனுக்கு தேவையானதை செய்வீர்கள். எதிர்ப்பாளர் சொந்த சிரமங்களால் விலகுவர். மனைவியின் அன்பு, பாசம் மனதில் நெகிழ்ச்சியை தரும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி செய்வீர்கள்.பணியாளர்கள் புதிய தொழில் நுட்பம் அறிந்து கொள்வர்.பெண்கள் உறவினர் குடும்பத்தில் சுக நிகழ்ச்சி நடத்த உதவுவர். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் பயிற்சி தேவைப்படும்.

பரிகாரம்: சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

சுக்கிரன், சந்திரன் தாராள நற்பலன் தருவர்.திட்டமிட்ட பணிகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். அறிமுகமில்லாதவருக்கு வீடு, வாகனத்தில் இடம் தர வேண்டாம்.
புத்திரரின் ஆர்வம் மிகுந்த செயல் பாராட்டு பெறும்.ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். வழக்கு ,விவகாரத்தில் தீர்வு கிடைக்க தாமதமாகலாம்.மனைவியின் எண்ணமும், செயலும் குடும்பத்திற்கு நன்மையை தரும்.தொழில் ,வியாபாரத்தில் அபிவிருத்தி செய்வீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.பெண்கள் வீட்டு உபயோக பொருள் வாங்குவர். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் வேண்டும்.
பரிகாரம் : பசு வழிபாடு செல்வ வளம் தரும்.

சுக்கிரன், குரு, கேது, சனீஸ்வரரால் வியத்தகு நற்பலன் கிடைக்கும். சுற்றுப்புறச்சூழல் அனுகூலம் தரும். பொதுநலப் பணியிலும் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் ஓரளவு உதவுவர். வெளியூர் பயணம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். புத்திரர் பெற்றோரின் சொல் கேட்டு நடந்து கொள்வர். உடல் ஆரோக்கியம் பெறும். வீட்டு உபயோகப்பொருள் வாங்குவீர்கள்.மனைவியின் ஒவ்வொரு செயலும் சிறப்பாக அமையும். குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி கூடும். தொழிலில் வளர்ச்சியும், பணவரவும் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் கணவரின் அன்பில் மகிழ்ச்சிகர வாழ்வு நடத்துவர். மாணவர்கள் அக்கறையுடன் படித்து தேர்ச்சி பெறுவர்.

பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு வெற்றியளிக்கும்.

சுக்கிரன், புதன், ராகு ,சந்திரன் ராஜயோக பலன் தருவர். நிகழ்வுகள் சாதகமாக அமைந்திடும்.
குழப்பம் விலகி பணிகளில் மனப்பூர்வமாக ஈடுபடுவீர்கள்.புத்திரரின் செயல்களை கவனித்து ஒழுங்கு செய்யவும். சொந்த சிரமங்களால் எதிரி விலகுவர்.வாழ்வியல் நடைமுறை சிறப்பாகும். மனைவி குடும்ப நலனில் அக்கறை கொள்வார்.வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி செய்வீர்கள். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். பெண்கள் கணவரின் அன்பில் மகிழ்ச்சிகர வாழ்வு நடத்துவர். மாணவர்கள் படிப்பு தவிர பிற விவாதம் பேச வேண்டாம்.
பரிகாரம்: குரு வழிபாடு சுபவாழ்வு தரும்.

செவ்வாய், சுக்கிரன், சூரியன், புதன் அளப்பரிய நற்பலன் தருவர்.நிகழ்வுகள் சாதகமாக அமைந்திடும்.குழப்பம் விலகி பணிகளில் மனப்பூர்வமாக ஈடுபடுவீர்கள். தம்பி, தங்கை அன்பு,பாசத்துடன் பழகுவர். வாகனத்தின் பயன்பாடு அதிகரிக்கும். புத்திரர் உங்களின் வழிகாட்டுதலை முழு மனதுடன் ஏற்றுக்கொள்வர். பூர்வ சொத்தில் வளர்ச்சியும், பணவரவும் கூடும். மனைவி உங்களின் இன்ப துன்பத்தில் சமபங்கு கொள்வார். தொழில்,வியாபாரத்தில் அளப்பரிய வளர்ச்சி ஏற்படும். பணியாளர்கள் கூடுதல் வேலை வாய்ப்பை ஏற்றுக்கொள்வர். பெண்கள் உறவினர்களை நன்கு உபசரிப்பர்.மாணவர்களுக்கு படிப்பில் ஞாபகத்திறன் வளரும்.

பரிகாரம்: நரசிம்மர் வழிபாடு வெற்றி தரும்.

உற்சாகமுடன் பணிபுரிவீர்கள். உறவினர், நண்பர்களின் உதவி கிடைக்கும். புதிய வாகனம் வாங்க அனுகூலம் உண்டு. புத்திரர் விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள். பணக்கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள்.வெளியூர் பயணத்தில் மாற்றம் ஏற்படலாம். உடல் ஆரோக்கியம் மேம்படும்.மனைவியின் மனதில் நம்பிக்கை வளர உதவுங்கள். குடும்பத்தில் ஒற்றுமை அவசியம். தொழில்,வியாபாரம் புதியவர்களின் ஆதரவில் வளர்ச்சி பெறும். பணியாளர் கூடுதல் தொழில் நுட்பம் அறிந்து கொள்வர்.பெண்கள் தாய் வீட்டுக்கு உதவுவர். மாணவர்கள் படிப்புடன் கலைகளும் பயில்வர்.

பரிகாரம்: விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.

புதன், சுக்கிரன், சந்திரன் சுப பலன் வழங்குவர்.மன உறுதியுடன் முக்கிய பணிகளை நிறைவேற்றுவீர்கள்.
உடன்பிறந்தவர் இயன்ற அளவில் உதவுவர். புத்திரரின் எதிர்கால வாழ்வுக்கு தேவையானதை செய்வீர்கள். சொத்து, ஆவணம் பிறர் பொறுப்பில் தர வேண்டாம்.குடும்பத்துடன் சுற்றுலா சென்று வர திட்டமிடுவீர்கள்.மனைவி குடும்பத்தில் ஒற்றுமையை பேணி காத்திடுவார். தொழில், வியாபாரம் புதியவர்களின் ஆதரவில் வளரும்.பணியாளர்கள் கூடுதல் வேலை வாய்ப்பை ஏற்று கொள்வர். பெண்கள் பணச்செலவில் சிக்கனம் வேண்டும்.மாணவர்கள் படிப்புடன் கலைகளும் பயில்வர்.
சந்திராஷ்டமம்: 29.7.19 அதிகாலை 4:55 மணி -31.7.19 காலை 9:10 மணி
பரிகாரம்: ராமர் வழிபாடு வெற்றியளிக்கும்.

புதன், சுக்கிரன், சந்திரன் நற்பலன் வழங்குவர்.பழகுபவர்களின் மனம் உணர்ந்து பேசுவதால் நற்பலன் பெறலாம்.செயல்கள் அதிக முயற்சியால் நிறைவேறும். தாய்வழி உறவினர் உதவுவர். குடும்பத்தின் தேவை பூர்த்தியாகும்.புத்திரரின் அறிவு, செயல் திறன் பரிமளிக்கும். மனைவி கருத்திணக்கமுடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி செய்வீர்கள். அரசாங்க உதவி பெறலாம்.பணியாளர்கள் அதிகம் உழைத்து பணம் சேமிப்பர். பெண்கள் புத்தாடை, நகை வாங்குவர். மாணவர்கள் படிப்பில் முன்னேறுவர்.

பரிகாரம்: குரு வழிபாடு சுப வாழ்வு தரும்.

புதன், ராகு, குரு, சந்திரன் அனுகூல,பலன் தருவர்.இஷ்டதெய்வ அருள் பலம் துணை நிற்கும். முக்கியமான பணி எளிதாக நிறைவேறும்.
உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை தரும்.புத்திரர் விரும்பிய பொருள் வாங்க பிடிவாதத்துடன் அணுகுவர். வழக்கு, விவகாரத்தில் சுமூக தீர்வு கிடைக்கும். மனைவியின் மனதில் நம்பிக்கை வளர உதவுங்கள்.சுற்றுலா பயணத்தில் பாதுகாப்பில் கவனம் வேண்டும். தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை தாமதமின்றி சரி செய்யவும். பணியாளர்கள் பணியிடத்தில் விவாதம் பேச வேண்டாம்.பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள் பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல கூடாது.
சந்திராஷ்டமம்: 2.8.19 பகல் 12:06 மணி-3.8.19 நாள் முழுவதும்.
பரிகாரம்: நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

சூரியன், செவ்வாய், கேது, சனீஸ்வரரால் அதிக நன்மையுண்டு. பணிகளில் நேர்த்தி மிகுந்திருக்கும்.

உறவினர்களிடம் நற்பெயர் பெறுவீர்கள்.வாகனத்தில் பராமரிப்பு, பணச்செலவு கூடும்.புத்திரரின் செயல் சிறப்பாக அமைய உதவுவீர்கள். நண்பருக்கு கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பலம் பெறும்.மனைவியின் ஆலோசனை குடும்பத்தில் ஒற்றுமையை வளர்க்கும். தொழிலில் இடையூறு விலகி வளர்ச்சி அதிகரிக்கும்.பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும்.பெண்களுக்கு மனதில் இருந்த குழப்பம் விலகும். மாணவர்கள் படிப்பில் சிறந்து, நண்பருக்கும் உதவுவர்.
பரிகாரம்: விநாயகர் வழிபாடு மகிழ்ச்சி தரும்.

சுக்கிரன், குரு, சந்திரன் அளப்பரிய நற்பலன் வழங்குவர். புத்தி சாதுர்யத்துடன் செயல்படுவீர்கள். உங்கள் நற்செயலை நண்பர் வாழ்த்துவர். குடும்பத்திற்கான தேவை நிறைவேறும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளலாம். புத்திரர் உங்கள் சொல்லை அரைகுறை மனதுடன் ஏற்று கொள்வர். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.மனைவி வழி சார்ந்த உறவினர்களின் உதவி கிடைக்கும்.தொழில், வியாபாரத்தில் அளப்பரிய வளர்ச்சி உண்டு. பணியாளர்கள் நேர்த்தியாக பணிபுரிவர். பெண்கள் தாய் வீட்டுக்கு உதவுவர்.மாணவர்கள் படிப்பில் புதிய உத்தி பின்பற்றுவர்.

சந்திராஷ்டமம்: 6.8.19 மாலை 4:35 மணி- 8.8.19 இரவு 9:12 மணி
பரிகாரம்: அம்பிகை வழிபாடு மகிழ்ச்சி தரும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here