இலங்கை கணக்காளர் சேவை தரம் 3 ஆட்சேர்ப்புக்கு போட்டிப்பரீட்சை


இலங்கை கணக்காளர் சேவையின் தரம் 3ற்கு 146 பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் (02) வெள்ளிக்கிழமை வெளியாகிய அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. திறந்த பரீட்சை மூலம் 86 பேரையும் மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சை மூலம் 60 பேரையும் சேர்த்துக்கொள்ள பொது நிருவாக அனர்த்த முகாமைத்துவ மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு திட்டமிட்டுள்ளது.

திறந்த போட்டிப்பரீட்சைக்கு 22-30 வயதுக்கு உட்பட்ட பட்டம் அல்லது டிப்ளோமா பெற்ற தகுதிவாய்ந்த ஆண் பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். பரீட்சைக் கட்டணம் 1000ருபா ஆகும். அதேவேளை மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சைக்கு தகுதிவாய்ந்த அரச அலுவலரொருவர் 5வருட சேவையினை கட்டாயம் பூர்த்தி செய்திருத்தல் அவசியம். பரீட்சைக்கட்டணம் 1000 ரூபா ஆகும்.

இரண்டுபரீட்சைகளுக்கும் விண்ணப்பிப்போர் 1500 ருபா மட்டும் செலுத்தினால் போதுமானது. விண்ணப்ப முடிவுத் திகதி செப்டெம்பர் 2ஆம் திகதியாகும் என அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here