புதிய தொடர்: பூவே செம் பூவே

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கும் புதிய தொடர் பூவே செம் பூவே. போலீஸ் அதிகாரிக்கும் அவரது குடும்பத்திற்கும் இடையிலான உரசல்கள் தான் கதை. இதில் பத்ரா என்ற அந்த போலீஸ் அதிகாரி கேரக்டரில் மவுனிகா நடிக்கிறார்.

சமூகத்தில் நடக்கும் அவலங்களை தட்டிக் கேட்டு அதற்கு உரிய தண்டனை வாங்கித் தர துடிக்கும் பத்ராவுக்கு குடும்ப ரீதியாகவும், பணி ரீதியாகவும் சவாலாக விளங்கும் அண்ணி உமா மகேஸ்வரி கேரக்டரில் ஷமிதா நடிக்கிறார். திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 7:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

லைட் சவுண்ட் அண்ட் மேஜிக் நிறுவனம் தயாரிக்கும் இந்த தொடருக்கு இயக்குனர் சார்லஸ் திரைக்கதை அமைத்திருக்கிறார். இவர் ஏற்கனவே காத்து கருப்பு, ஜீ பூம் பா, ரோஜா கூட்டம் மற்றும் என் தோழி, என் காதலி, என் மனைவி உள்ளிட்ட பல்வேறு தொடர்களை இயக்கியவர். குள்ள நரி கூட்டம் திரைப்பட இயக்குநர் ஸ்ரீ பாலாஜி இயக்குகிறார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here