மனைவியை தூக்கியபோது இடுப்பு பிடித்து விட்டது… செக்ஸிற்கு பாதிப்பா?: டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள் 7

எம்.கிருஷ்ணா (37)
மட்டக்களப்பு

நான் வங்கியொன்றில் உதவி முகாமையாளராக கடமையாற்றுகிறேன். என் மனைவி ஆசிரியை. 6 வருடங்களின் முன் எமக்கு திருமணமானது. ஐந்து வயதில் ஒரு மகள் இருக்கிறார். எமது பிரச்சனை கொஞ்சம் வித்தியாசமானது. எமது தாம்பத்திய உறவில் எந்த சிக்கலும் இருக்கவில்லை. இரண்டாவது குழந்தையை ஆரம்பத்தில் கொஞ்சம் தள்ளி வைத்தோம். இப்போது எனக்கு செக்ஸில் ஆர்வமில்லாமல் போய்விட்டது. மனைவியுடன் செக்ஸ் வைத்தே ஏழு மாதங்களாகிறது. நண்பர்களுடன் பேசும்போதே, வேறு சில படங்கள் பார்க்கும்போதே செக்ஸ் ஆர்வம் எழுகிறது. ஆனால் பொதுவாக அந்த உறவு இல்லாமல் போகிறது. இது சீரியசான விடயம் என நண்பர்கள் எச்சரிக்கிறார்கள். எனக்கு என்ன பிரச்சனை டொக்ரர்?

டாக்டர் ஞானப்பழம்: தம்பி, உண்மையை சொன்னால் எங்களிற்கு எந்த பிரச்சனையும் இல்லையென்றுதான் நினைக்கிறேன். ஆனால் அதை சில ஆய்வுகள் செய்த பின்னர்தான் உறுதிசெய்யலாம். என்றாலும், நீங்கள் சொன்ன இந்த பிரச்சனை இப்பொழுது சமது சமூகத்தில் பலரை பாதிக்கிறது. பலர் இதற்கான தீர்வு தேடி வைத்தியர்களிடம் வருகிறார்கள்.

வேலை காரணமான மன அழுத்தமும், அதன் தொடர்ச்சியாக இருவருக்குமிடையே உருவான அன்புக் குறைபாடும் தாம்பத்ய வாழ்க்கையை உப்பு சப்பில்லாமல் ஆக்கிவிடுகின்றன. அலுவலகப் பணி, சொந்த வீடு கட்ட வாயையும் வயிற்றையும் கட்டிக்கொண்டு உழைத்தது, லோன் நெருக்கடி, குடும்பத்தோடு நேரம் செலவழிக்க முடியாமல் போனது… என லைஃப்ஸ்டைல் மாற்றங்கள் தாம்பத்ய வாழ்க்கையைப் பதம் பார்க்கிறது.

கவுன்சலிங் மூலம் இதை மாற்றலாம். இது, பல வீடுகளிலும் நடக்கக்கூடியதுதான். என்ன… பலரும் இதை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. இது இப்படியே வளர்ந்தால் ஒரு கட்டத்தில், தகாத உறவுவரை சென்றுவிடும் அபாயமிருக்கிறது. ஆணோ, பெண்ணோ… உடலுறவில் நாட்டமில்லாமல் இருப்பதற்கான காரணத்தை அறிந்துகொள்ள வேண்டியது மிக அவசியம். உடல் பிரச்னையோ, உளவியல் அல்லது உணர்வு சிக்கலோகூட இணையின் மாற்றத்துக்குக் காரணமாக இருக்கலாம்.

அவற்றில் சில முக்கிய காரணங்கள்…

உளவியல் சிக்கல்

மன அழுத்தம், மனச்சோர்வு இருந்தால், ஒரு மனிதரால் எதையும் ஈடுபாட்டுடன் செய்ய முடியாது. உடலும் மனமும் இணைந்து ஈடுபடும் தாம்பத்யத்துக்கும் இது அவசியம். இணையிடம் பேசி அவரது மன அழுத்தத்துக்கும் மனச்சோர்வுக்கும் என்ன காரணம் என்பதைக் கண்டறிய வேண்டும். குடும்பச் சிக்கல்கள், பொருளாதாரம் தொடர்பான குறைகளென்றால், அவற்றைத் தீர்த்துவைக்க முயலலாம். அவருக்கு உற்ற துணையாக நீங்கள் இருப்பதை உறுதிப்படுத்துங்கள்; அவர் உங்களை முழுமையான துணை என நம்பும்படி மனம்விட்டுப் பேசுங்கள். இதுதான் உளவியல் சிக்கல்களைத் தீர்த்துவைக்கும் முதல் மருந்து.

ஆரோக்கியக் குறைபாடு

இரத்த ஓட்டம் தொடர்பான நோய்கள், நீரிழிவு, ஹைப்போதைராய்டிசம், இதயநோய்கள், ஹார்மோன் குறைபாடுகள் இருந்தால், செக்ஸ் குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே, ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.

சுய இன்பப் பழக்கம்

சில ஆண்கள்/பெண்களுக்கு செக்ஸ் வைத்துக்கொள்ள ஆசை இருக்கும். ஆனால், மனத்தடை, பயம் போன்ற காரணங்களால் உடலுறவைத் தவிர்ப்பார்கள். அதே நேரத்தில், சுய இன்பத்தில் நாட்டமுள்ளவர்களாக இருப்பார்கள். இது தவறில்லை. ஆனால், அதுவே அளவுக்கு அதிகமாகக் கூடாது. மனத்தடைகளைத் தகர்த்துவிட்டு, இதிலிருந்து விடுபட்டால், இருவரும் திருப்தியடையலாம்.

பாசக் குறைபாடு

கணவன், மனைவிக்கு இடையில் தாம்பத்ய உறவு செழித்திருக்க ஒருவர் மீது மற்றொருவர் காட்டும் அன்பும் பாசமும் முக்கியம். அந்தப் பிணைப்புதான் அவர்களை இணைத்து வைத்திருக்கும். குடும்பப் பிரச்னைளை அவ்வப்போது களைந்துவிட வேண்டும். இல்லாவிட்டால், காலப்போக்கில் தன்னாலேயே துணையுடனான உடலுறவு ஆர்வம் குறைந்து போகும்.

போதைப் பழக்கம்

நிக்கோடின், மார்ஃபைன் போன்ற போதைப் பொருள்கள், உடலுறவில் நாட்டமில்லாமல் செய்யக்கூடிய அன்டிடிப்ரஸ்ஸன்ட் (Antidepressant) மருந்துகளை உட்கொள்வதும், தாம்பத்யக் குறைபாட்டை உண்டாக்கும்.

மேலே குறிப்பிட்டதுபோல, தனியான ஒரு காரணம் அனைவருக்கும் பொருந்தாது. இருவருக்குமிடையிலான உண்மையான, தெளிவான உரையாடல்தான் இந்தச் சிக்கலைத் தீர்க்கும் முதல் மருந்து. மேற்கண்ட பிரச்னைகள் ஏற்பட்டால், நீங்களாகவே சுய பரிசோதனை செய்து, சரிப்படுத்திக்கொள்ள முயலலாம். அவை பலனளிக்காத பட்சத்தில் மருத்துவரை அணுகலாம்.

எவ்.எஸ்.ரஸாக் (26)
கொழும்பு

எனக்கு திருமணமாகி 2 மாதங்களாகிறது. மனைவியை தூக்கும்போது, இடுப்பு பிடித்து விட்டது. பின்னர் செக்ஸ் வைத்துக் கொள்ளும்போதும், இடுப்பில் வலிக்கிறது. சில நாட்கள்தான் இந்த பிரச்சனை. இடுப்பில் வலியிருந்தால் பின்னாளில், செக்ஸில் பிரச்சனை வரும் என நண்பர்கள் எச்சரிக்கிறார்கள். உண்மையா?

டாக்டர் ஞானப்பழம்: தம்பி இது சாதாரண விஷயம். அருகிலுள்ள பொது வைத்தியர் ஒருவரை அணுகி, உண்மையை சொல்லியோ, அல்லது பாரம் தூக்கும்போது இடுப்பு சுளுக்கி விட்டதென்றோ கூறி மருந்து வாங்கிக் கொள்ளுங்கள். இப்படி அசந்தர்ப்பமான நேரங்களில், இடுப்புப் பிடித்துக்கொள்ளும் சம்பவம் பலருக்கும் ஏற்பட்டிருக்கும். இந்தப் பிரச்னையை எப்படி அணுகுவது என்று பார்ப்போம்.

இடுப்புவலியோ, இடுப்புப்பிடிப்போ ஏற்பட்டுவிட்டால் முதுகுத்தண்டு பாதிக்கப்படும், செக்ஸில் சரியாக ஈடுபட முடியாது என்ற ஒரு மூடநம்பிக்கை இருக்கிறது. உண்மை என்னவென்றால், அசைவதில்தான் பிரச்னை ஏற்படுமே தவிர, செக்ஸில் பாதிப்பு இருக்காது. எனவே, பயப்படத் தேவையில்லை. பிரிட்டிஷ் மெடிக்கல் ஜேர்னல் (British medical journal) தெரிவித்திருக்கும் ஒரு புள்ளிவிவரம், “உலக அளவில் 58 சதவிகிதம் பேருக்கு வாழ்க்கையில் ஒருமுறையாவது செக்ஸின்போது இடுப்புவலியோ, பிடிப்போ ஏற்பட்டிருக்கும்“ என்கிறது. இவர்களில், 70 சதவிகிதம் பேருக்கு இடுப்புவலி ஏற்பட, சதைப்பிடிப்பே காரணம். இந்தப் பிரச்னையைத் தீர்க்க, வராமல் தடுக்க ஸ்ட்ரெச்சிங் உடற்பயிற்சி (Stretching Exercise) சிறந்தது. ஸ்ட்ரெச்சிங் தசைகளைத் தளர்வாக்கும்; தசைகள் எளிதாக இயங்க உதவும். எந்தக் கடினமான வேலையைச் செய்வதாக இருந்தாலும், அதற்கு முன்னதாக இந்தப் பயிற்சியைச் செய்யலாம்.

முதுகுப்பகுதிக்கு சரியான சப்போர்ட் கிடைக்க படுக்கை சற்றுக் கடினமானதாக இருக்க வேண்டும். நிற்கும்போதோ, நடக்கும்போதோ, உட்கார்ந்திருக்கும்போதோ முதுகுப்பகுதி நேராக இருக்க வேண்டும். உடலை எவ்வளவு நேராகப் பயன்படுத்துகிறோமோ அவ்வளவுக்கு நல்லது. முதுகுப்பகுதித் தசைகளை வலுப்பட, அதிகப்படியான உடல் எடையைக் குறைக்க வேண்டும்.

இடுப்புவலி, முதுகுப்பிடிப்பு இருக்கும்போதும் செக்ஸில் ஈடுபடலாம். வலி இருப்பவர் கீழே படுத்துக்கொண்டு உறவுகொண்டால் வலி தெரியாது. அதிக வலி இருந்தால், வலி நிவாரண மாத்திரைகளைப் பயன்படுத்தலாம். ஆனால், மாத்திரைகளைத் தவிர்ப்பதே நல்லது. வெந்நீர் ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும். உடற்பயிற்சிகள் மூலம் உடலை வலுவாக்கி, சிரமமில்லாமல் செக்ஸில் ஈடுபடுங்கள்.

முந்தைய பகுதி: டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள் 06

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here