மஹிந்தவையும், கோத்தாவையும் காப்பாற்றியது மாவையே; போராட்டம் வெடிக்குமென மக்களை ஏமாற்றுகிறார்: முன்னணி கடும் குற்றச்சாட்டு!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மஹிந்த ராஜபக்சவையும், கோத்தபாய ராஜபக்சவையும் காப்பாற்றியது கூட்டமைப்பினர்தான். என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மக்கள் வாக்களித்தது நீதிமன்றங்களில் சென்று வழக்காடுவதற்காக அல்ல. அரசியல்ரீதியாக பிரச்சனைகளை தீர்க்கவே. ஆனால், கூட்டமைப்பினரால் ஒரு அரசியல் கைதி கூட விடுவிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மக்கள் வாக்களித்தது, அரசியல் கைதிகள் விடுதலை, போர்க்குற்ற விவகாரம், இப்பிரச்சனை விடயம் உள்ளிட்டவற்றை அரசியல்ரீதியாக அணுகி நிரந்தர தீர்வை பெறவே மக்கள் வாக்களித்தனர். வழக்கு தாக்கல் செய்தே அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கலாமெனில், எல்லா கட்சிகளிலும் சட்டத்தரணிகள் இருக்கிறார்கள். அதற்கு பொதுவான என்.ஜி.ஓ அமைப்பொன்றை உருவாக்கி, அதன் மூலம் அவற்றை செய்யலாம். ஆனால், அரசியல்ரீதியாக தீர்க்கப்பட வேண்டியவற்றை, அரசியல்ரீதியாகத்தான் தீர்க்கலாம்.

2015ம் ஆண்டு தேர்தலில் கூட்டமைப்பினர் அப்படித்தான் மக்களிடம் ஆணை கேட்டனர். 2016 இல் தீர்வு என சம்பந்தன் மக்களிடம் வாக்களித்தே, ஆணை கேட்டார்.

2015 செப்ரெம்பர் மாதம் மாவை தலைமையில் ஜெனீவாவிற்கு சென்ற மாவை தலைமையிலான 15 பேர் கொண்ட குழுவினர், சர்வதேச விசாரணை தேவையில்லை, உள்ளக விசாரணையே தேவையென கூறினார்கள். மனித உரிமைகள் பேரவையிலுள்ள நாடுகளை உள்ளக விசாரணையின் பக்கம் திருப்பியது கூட்டமைப்பின் குழு.

ஜெனீவாவில் அவர்கள் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், நாங்கள் யாரையும் பழிவாங்க விரும்பவில்லை, பிரச்சனைக்கு தீர்வு காணவே விரும்புகிறோம் என தெரிவித்திருந்தனர். வெளிநாடுகளிற்கு விருப்பமான ஆட்சியை இலங்கையில் நடத்துவதற்காக, ஐ.தே.கவை பாதுகாப்பதற்காகவே அவர்கள் ஜெனீவா விடயத்தை கையாண்டார்கள்.

போர்க்குற்ற விசாரணை மஹிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராகவே நடத்தப்படவிருந்தது. மாவை சேனாதிராசா, சுமந்திரன் தலைமையில் சென்ற குழுவினரே மஹிந்த ராஜபக்சவையும், கோத்தபாயவையும் காப்பாற்றியது.
இதையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என நினைத்து மாவை சேனாதிராசா இப்பொழுது பேசுகிறார். மக்களை முட்டாள்கள் என நினைக்க வேண்டாமென மாவை சேனாதிராசாவிடம் தெரிவிக்க விரும்புகிறேன்.

கூட்டமைப்பு அரசுக்கு முண்டு கொடுத்து வரும் இத்தனை வருடத்தில் ஒரு அரசியல் கைதி கூட விடுவிக்கப்படவில்லை. அரசியல்கைதிகள் விடயத்தையும் குறிப்பிட்டே 2015 தேர்தலில் வாக்கு கேட்டார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக ஒரு அரசியல் கைதிகூட விடுவிக்கப்படவில்லை.

நீராகராம் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல்கைதி தேவதாசன் விடுதலை செய்யப்பட வேண்டும். அவரது நியாயமான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here