பிள்ளைகளால் கைவிடப்பட்ட யாழ் முதியவரின் அவலம்: அதிகாரிகள் மீட்டனர்!


பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில், உணவின்றி அல்லாடிய முதியவர் ஒருவர் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (22) இந்த சம்பவம் நடந்தது.

காரைநகர் மொந்திபுலத்தில் நடந்த இந்த சம்பவத்தில, பாலசிங்கம் (80) என்ற ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தரே மீட்கப்பட்டார்.

ஓய்வூதியம் பெறும் இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். பிள்ளைகள் இவரது ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொண்டு இவரைத் தனியே தவிக்கவிட்டு, தற்போது காரைநகருக்கு வெளியே வசிக்கின்றனர் எனக் கூறப்படுகிறது.

பல நாள்களாக உணவின்றி, எலும்பும் தோலுமாக, இயக்கமற்ற நிலையில் இருந்த இவரை காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஆகியோர் மீட்டு காரைநகர் வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

இந்த தகவல் பரவியதையடுத்து, சமூக வலைத்தளங்களில் பல அதிர்ச்சி தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது. இவரது மனைவியும் இறப்பதற்கு சில மாதங்களின் முன்னர் இதேநிலையில் இருந்தார் என அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பதிவிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here