அஜித் பட டிக்கெட் ரூ.350- 700: பொலிஸ் ஆசியுடன் விற்பனை

நடிகர் அஜித் நடிப்பில், நேர்கொண்ட பார்வை படம், இன்று வெளியாகி உள்ளது. அதற்கான, டிக்கெட்டுகள், தாம்பரம் சரக பகுதிகளில், அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்து உள்ளது.

நடிகர் அஜித் நடித்துள்ள, நேர்கொண்ட பார்வை படம், தமிழகம் முழுவதும், இன்று வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான டிக்கெட்டுகள், 2ம் திகதியில் இருந்து, தாம்பரம் மற்றும் அதை சுற்றியுள்ள முக்கிய திரையரங்குகளில், விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.காலை காட்சிகள், 7:00 மற்றும் 10:00 மணிக்கும், மதியம், 1:00 மற்றும் மாலை, 4:00 மணிக்கும், இரவு காட்சி, 7:10 மணிக்கும், திரையிடப்பட உள்ளது.இந்நிலையில், படத்திற்கான டிக்கெட்டுகள், அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து, ரசிகர்கள் கூறியதாவது:

தியேட்டர்களில் வழங்கப்படும் டிக்கெட்டுகளில், அதன் உண்மை விலை, பேனாவால் முழுவதுமாக அழிக்கப்பட்டு, ஒரு டிக்கெட், 350 – 600 ரூபாய் வரை, விற்பனை செய்யப்படுகிறது.இதில், காலை, 4:00 மணி சிறப்பு காட்சிக்கு மட்டும், 700 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது, தாம்பரம் போலீசார் துணையுடன் நடக்கிறது.படம் வெளியாகும் நாளான இன்று, இதன் விலை, மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.போலீசார் பெயரைக் கூறி, அவர்களின் நண்பர்கள் சிலர், தாம்பரம் சரக திரையரங்குகளில் இருந்து, டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி, அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். ரசிகர் மன்றம் சார்பில், டிக்கெட் விற்பனை குறித்து கேட்டால், அடியாட்களை வைத்து மிரட்டுகின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here