மனைவியை திருப்திப்படுத்த முடியாமல் உள்ளதன் காரணம் என்ன?: டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்! 6

எல்.முருகதாஸ் (39)
யாழ்ப்பாணம்

என் நண்பனுக்கு 30 வயது ஆவதற்கு முன்னரே நீரிழிவு நோய் வந்துவிட்டது. அப்போதுதான் திருமணம் செய்திருந்தான். கொஞ்ச நாள்களிலேயே அவனுக்கு மனைவியிடம் ஈர்ப்பு இல்லாமல் போய்விட்டது. அடிக்கடி மனைவியிடம் சண்டை போட்டுக்கொண்டு, எங்களுடன் குடிக்க வந்துவிடுவான். காரணம் கேட்டபோது பதில் சொல்லாதவன், ஒரு கட்டத்தில் போதையில் உண்மையைச் சொன்னான். அவனுக்கு விரைப்புத் தன்மை குறைந்து வருவதால், மனைவியை நெருங்குவதில்லை என்றும், எங்கே தன் குறையைக் கண்டுபிடித்துவிடுவாளோ என்ற அச்சத்தில் நெருங்காமல் இருந்திருக்கிறான். இன்னும் அதற்கான சிகிச்சை என்னவென்று தெரியாமல் தடுமாறுகிறான். இதை எப்படி சரிசெய்வது?

டாக்டர் ஞானப்பழம்: அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு, சமீபகாலங்களில் ஆண்களின் விரைப்புத் தன்மை குறைபாட்டுக்கு 90 சதவிகிதம், நீரிழிவு நோயே காரணமாகிறது. இரத்த அழுத்தம், வயது மூப்பு உள்ளிட்டவை வெறும் 10 சதவிதமே காரணமாகின்றன என்கிற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறது. நீரிழிவு நோய் என்பது நோய் அல்ல. ஒரு குறைபாடு. அதில், டைப் 1, டைப் 2 என இரு வகைகள் உண்டு. ‘டைப் 2’ விரைப்புத் தன்மைக் குறைபாட்டை உண்டாக்கும். இதனால், செக்ஸ் ஆர்வம் குறைவதும் உண்மை.

சரி… இது, எப்படி தாம்பத்ய பாதிப்பை ஏற்படுத்தும்?

செக்ஸில் ஈடுபட ஆணுறுப்பு விரைப்புத் தன்மையுடன் இருக்க வேண்டியது முக்கியம். அதில் குறைபாடு இருந்தால், சரிவரச் செயல்பட முடியாது. குழாயில் தண்ணீர் திறக்காதபோது இலகுவாக இருக்கும் டியூப், நீரைப் பாய்ச்சும்போது விரைப்பாகிவிடும். அதுபோல, ஆணுக்கு செக்ஸ் உணர்ச்சி உண்டாகும்போது, ஆணுறுப்புக்கு இரத்தம் விரைவாகப் பாய்ச்சப்படும். அதனால், அங்கு விரைப்புத் தன்மை உண்டாகும்.

நீரிழிவுநோய் காரணமாக உடலிலுள்ள அளவுக்கு அதிகமான குளூக்கோஸ், புரதத்துடன் இணைந்து, வேதி வினை மாற்றம் அடையும். இது, நரம்பு மற்றும் இரத்த நாளங்களை வெகுவாக பாதித்து, அவற்றைச் செயல்படவிடாமல் தடுக்கும். எனவே, விரைப்புத் தன்மைக் குறைபாடு உண்டாகி, செக்ஸ் வாழ்க்கை பாதிக்கப்படும்.

நாளுக்குநாள் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாகப் பெருகிவருகிறது. 40-45 வயதைக் கடந்த மொத்த ஆண்களின் எண்ணிக்கையில், 48 சதவிகிதம் பேர் நீரிழிவு நோயால் விரைப்புத் தன்மை குறைபாட்டுக்கு ஆளாகிறார்கள்.

சராசரியாக, வயது மூப்பு உள்ளிட்ட பிற காரணங்களால் 50 வயதைத் தொடும் ஆண்களில் 50 சதவிகிதம் பேருக்கும், 60 ப்ளஸ் ஆண்கள் 75 சதவிகிதத்தினருக்கும் விரைப்புத் தன்மை குறைபாடு உண்டாகும்.  நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளான ஆண்கள், சராசரி ஆண்களைவிட 10 – 15 ஆண்டுகளுக்கு முன்னதாகவே விரைப்புக் குறைபாடு பாதிப்புக்கு ஆளாவதாகக் கண்டறிந்திருக்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.

இந்தக் குறைபாட்டைச் சரிசெய்ய, முதலில் சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டியது அவசியம். கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிடுவதைக் குறைத்தல், உடற்பயிற்சி, வாழ்வியல் முறையில் மாற்றம் என மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கிய வாழ்க்கைக்குத் திரும்பலாம் என்பதை உங்கள் நண்பரிடம் கூறுங்கள்.

தி.வாகீசன் (26)
திக்கம்

எனது ஆணுறுப்பின் முன்பகுதி தோல் கடினமாக, பின் நோக்கித் தள்ள முடியாதபடி இருக்கிறது. இது திருமண உறவில் பிரச்சனையை ஏற்படுத்துமா?

டாக்டர் ஞானப்பழம்: முன்பகுதி தோல் (Fore skin) கடினமாக, பின்நோக்கி தள்ள முடியாதபடி இருப்பது அபூர்வமான ஒரு பிரச்சனையல்ல. இது சாதாரண, தீர்க்கப்படக்கூடிய பிரச்சனைதான். இந்த நிலைக்கு “ஃபைமோசிஸ்“ (Phimosis) என்று பெயர். இதன் காரணமாக உடலுறவின்போது கடுமையான வலி ஏற்படும். விந்து சீக்கிரமாக வெளியேறாது. தோல் கிழிந்து ஆணுறுப்பு காயமாகலாம். பொதுவாகவே, குளிக்கும்போது, ஆணுறுப்பின் முன் பகுதியில் இருக்கும் தோலைப் பின்பக்கம் தள்ளிவிட்டுவிட்டு, அதை நன்றாகக் கழுவவேண்டியது அவசியம். அப்போதுதான் நோய்த்தொற்றுகள் ஏற்படாது.

ஆணுறுப்பின் முன்பகுதியில் உள்ள தோல் (Fore skin) பின்பக்கம் தள்ள முடியாமல் சிலருக்கு இருப்பதுண்டு. சிலருக்குப் பிறப்பிலேயே அதுபோல இருக்கலாம். அல்லது, ஏதாவது நோய்த் தொற்றின் காரணமாகவும் அப்படி இருக்கலாம். பிறந்ததிலிருந்து அப்படி இருந்தால், அதற்கு ஒரே வழி சுன்னத் அறுவை சிகிச்சை (Circumcision) செய்வதுதான். நோய்த்தொற்றின் காரணமாக இதுபோல இருந்தால், தகுந்த சிகிச்சை எடுத்துக்கொண்டால் மட்டுமே சரியாகும்.

முந்தைய பகுதி: டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள் 05

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here