சிறுமியுடன் குடும்பம் நடத்தியவர் விளக்கமறியலில்!

பதினைந்து வயதுடைய சிறுமியை திருமணம் முடித்து குடும்பம் நடத்திய இளைஞரை இம்மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் நேற்று (16) உத்தரவிட்டுள்ளார்.

தங்க நகர், கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பதினைந்து வயதுடைய சிறுமியை மூன்று வருட காலமாக காதலித்து திருமணம் முடித்துள்ளதாகவும், அந்த விடயம் தொடர்பாக அப்பகுதி கிராம சேவகர் மற்றும் பொது மக்களும் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் மூதூர் நீதிமன்ற நீதிவானின் வாசஸ்தலத்தில் நேற்று முற்படுத்தப்பட்டபோதே, விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

பதினைந்து வயதுடைய சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here