செங்கலடி பிரதேச செயலாளருக்கும் கருணாகுழு யூலியனுக்கும் இடையில் என்ன தொடர்பு?

கருணாவின் முன்னாள் ஊடக செயலாளர் நியூட்டன் என்றழைக்கப்படும் யூலியனுக்கும் இடையில் உள்ள கள்ள தொடர்வு பற்றி அரசாங்க அதிபர் மா.உதயகுமார் அவர்களிடம் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கலடி பிரதேசத்தில் உள்ள இயற்கை வளங்களை பங்குபோடுவதில் யூலியனும் பிரதேச செயலாளரும் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் செங்கலடி பிரதேசத்தில் ஆற்றுமண் அனுமதி பத்திரம் வழங்குவதில் யூலியன் சொல்வதையே பிரதேச செயலாளர் கேட்டு செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

செங்கலடி பிரதேச செயலகத்திற்கு வரும் யூலியன், பிரதேசசெயலாளரின் அறையில் சில மணி நேரம் இரகசிய பேச்சில் ஈடுபட்டு வருகிறார். அடிக்கடி இந்த இரகசிய பேச்சு நடந்து வருகிறது. இதனால், பிரதேச செயலாளரை சந்திக்க வரும் பொதுமக்கள் காத்து கிடக்க வேண்டி உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

செங்கலடி பிரதேச செயலாளர் மண் அனுமதிபத்திரம் வழங்குவதில் ஒரு சிலருக்காக மட்டும் பணியாற்றுவதாகவும் ஏற்கனவே மண் அனுமதிப் பத்திரம் வைத்துள்ள பணக்கார வர்க்கத்திற்கு தொடர்ந்தும் பல அனுமதிப் பத்திரங்களை வழங்கியுள்ளதாக ஆதாரபூர்வமாக குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு முன்னர் இருந்த பிரதேச செயலாளர்,  யூலியனுடன் இதேபோன்று நெருங்கிய உறவு வைத்திருந்ததன் காரணமாக பல விசாரணைகளுக்கு முகம் கொடுத்தார்.

தற்போது அதே நடவடிக்கையை தற்போதைய செங்கலடி பிரதேச செயலாளர் தொடர்வதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

வெளி மாவட்டங்களிலுள்ள முஸ்லீம் செல்வந்தர்களை கூட்டி வந்து தமிழ் பிரதேசங்களில் மண் அனுமதிப் பத்திரம் எடுத்து கொடுப்பதற்கு யூலியனும் பிரதேச செயலாளரும் இணைந்து செயற்படுகின்றனர்.

இதன் ஊடாக பெருந்தொகை பணம் யூலியனுக்கும் பிரதேச செயலாளருக்கும் இடையில் பரிமாறப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனர்.

புதிய பிரதேச செயலாளரின் வருகையின் பின்னர் செங்கலடி பிரதேசத்தில் மண் அனுமதி பத்திரம் அதிகமாக வழங்கப்பட்டு வருவதுடன் மரக்கடத்தலும் அதிகரித்துள்ளது என அரசாங்க அதிபரிடம் தெரிவித்துள்ளனர்.

இது தொட‌ர்பாக தான் நடவடிக்கை எடுப்பதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளதாக முறைப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

யார் இந்த யூலியன் ?

ஆரம்ப காலத்தில் தமிழிழ விடுதலைப்புலிகளின் மேடைப்பேச்சாளராக 2001 சமாதான உடன்படிக்கை காலத்தில் செயற்பட்டிருந்தார். அதன் பின்னர் நிமலன் செளந்தர நாயகம், ஜெயானந்த மூர்த்தி ஆகியோரின் தேர்தல் பிரச்சார மேடைகளில் பேச்சாளராகவும் செயற்பட்டவர்.

அதன் பின்னர் விடுதலைப்புலிகளுடன் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக
EPDP கட்சியின் அந்துனன் கந்தசாமியுடன் (சிவா)சேர்ந்து சிறிது காலம் இயங்கி வந்தார்.

பின்னர் விடுதலைப்புலிகளால் தேடப்பட்டும் வந்தாா் .

கிழக்கில் ஏற்பட்ட கருணா பிரிவின் போது அதன் உறுப்பினர்கள் EPDP சிவாவின் வாழைச்சேனை அலுவலகத்தினை தங்களது செயற்பாட்டிற்கு பயன்படுத்தி வந்தனர். அந்த சமயத்தில் அவர்களுடன் ஏற்பட்ட பழக்கத்தின் பின்னர் கருணா அம்மான் பிரதியமைச்சராக ஆனதும் அவரின் ஊடகச்செயலாளராக நியூட்டன் என்ற பெயரில் செயற்பட்டார். இந்த காலத்தில் கரடியனாறு பகுதியில் கல் உடைக்கும் தொழிற்சாலையினை ஆரம்பித்திருந்தார். அத்துடன் தனது சொந்தங்களுக்கு கிழக்கு பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பினையும் வழங்கியிருந்தாா்.

பின்னர் கருணா அம்மானுடன் இருந்த சின்னத்தம்பியுடன்- இவர் ஆரம்பகால விடுதலைப்புலி உறுப்பினர்- ஏற்பட்ட முரண்பாட்டின் போது அவரினால் கொழும்பில் வைத்து அடியும் வாங்கியிருந்தாா்.

அத்துடன் அங்கிருந்து பிரிந்து சென்றவர் பின்னர் பிள்ளையான், அமீரலி ஆகியோருடன் இணைந்து செயற்பட்டாா்.

பின்னர் 2012 ஆண்டு கிழக்கு மாகாணசபை தேர்தலில் தனது அண்ணன் ஆசிரியர் ரமேஸ் கலைச்செல்வன் என்பவரை SLFP கட்சியின் வேட்பாளராக களமிறக்கினார். எனினும், அவரால் தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை. இதன்பின்னர் பகிரங்கமாக தலைகாட்டாமல் இருந்தார். சிறிதுகாலத்தின் பின்னர் வாகரை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டு அங்கும் ஐந்து இலட்சம் ரூபாய்கு மேற்பட்ட பணத்தினை மோசடி செய்து அதிலிருந்தும் விலக்கப்பட்டு தற்போது செங்கலடி பிரதேச செயலகப்பிரிவில் பிரபல மண் விற்பனையாளரும் கல் விற்பனையாளருமாக செயற்பட்டு வருகின்றாா்

தற்போதய செங்கலடி பிரதேச செயலாளரின் நீண்ட நாள் நண்பராகவும் அவரை முதல் வரவேற்ற நபராகவும் இவரே உள்ளார்.

இவர் பிரதேச செயலாளரினை சந்திக்க வரும் வேளைகளில் பல மணித்தியாலங்கள் கலந்துரையாடுகிறார் . இதனால் பொது மக்கள் பிரதேச செயலாளரை காத்து நின்று சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் மக்கள் விசனம் தெரிவிப்பதுடன், பல பின்புலன்களை கொண்ட நபருக்கு இவ்வாறு பொது மக்கள் சேவை செய்யும் அதிகாரி மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பதன் பின்புலம் என்ன என்பதனை ஆராய வேண்டிய தேவையுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் மண், காட்டு மரங்கள் தற்போது முறையற்ற விதத்தில் கடத்தப்படும் பிரதேச செயலகப்பிரிவாக செங்கலடி மாறிவருகின்றமையும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாக உள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here