கல்முனையில் பட்டாசு கொளுத்தி கொண்டாட்டம்!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முழு அதிகாரம் கொண்ட கணக்காளர் நியமிக்கப்படுவார் என நேற்று மாலை ரணில் விக்கிரமசிங்க வழங்கிய வாக்குறுதியை தொடர்ந்து, கல்முனை நகரில் பட்டாசு கொளுத்தி இளைஞர்கள் கொண்டாடினர்.

நேற்று மாலை கல்முனை நகரில் ஒன்றுகூடிய சில இளைஞர்கள் பட்டாசு கொளுத்தி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதன்போது கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துமாறு கோரி உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொண்டுவந்த கல்முனை மாநகரசபை உறுப்பினர் ராஜனும் பங்குகொண்டதுடன் அவரை இளைஞர்கள் தூக்கி தமது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here