ஆதரவு 92; எதிர் 119: கூட்டமைப்பு கைகொடுக்க தப்பியது ரணிலின் தலை!


உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க தவறியதன் மூலம் அரசும், பிரதமரும் தோல்வியடைந்து விட்டனர் என தெரிவித்து, ஜே.வி.பி சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்தது.

நேற்றும் இன்றும் நடந்த இரண்டு நாள் விவாதத்தின் முடிவில், சற்று முன்னர் நடந்த வாக்கெடுப்பில், ஜே.வி.பியின் பிரேரணைக்கு ஆதரவாக 92 வாக்குகளும், எதிராக 119 வாக்குகளும் கிடைத்தன.

பிரேரணைக்கு ஆதரவாக ஜே.வி.பி, மஹிந்த அணி வாக்களித்தனர்.

எதிராக ஐ.தே.முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களித்தனர்.

சிவசக்தி ஆனந்தன், மஹிந்த சமரசிங்க, விஜேதாச ராஜபக்ச உள்ளிட்ட நால்வர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here