UPDATE: அரசை ஆதரிக்க கூட்டமைப்பு உத்தியோகபூர்வ முடிவு!

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக முடிவெடுத்தது.

கூட்டமைப்பிற்குள் திடீர் திருப்பம்: அரசை ஆதரிக்க எம்.பிக்கள் மறுப்பு; நாடாளுமன்ற கூட்டத்தில் முடிவில்லை; அவசரமாக கூடியது ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்!

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவகாரத்தில் திடீர் திருப்பமாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் கணிசமான எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க மறுத்துள்ளனர்.

இன்று மாலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் இடம்பெற்றது. இதன்போது ஒருமித்த முடிவெடுக்க முடியாமல் போனது. அரசுக்கு ஆதரவாக எம்.பிக்களை வாக்களிக்க வைப்பதில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் தீவிரமாக முயன்றபோதும், சுமார் ஐந்து வரையான எம்.பிக்கள் ஆதரித்து வாக்களிக்க மறுத்து விட்டனர். நீண்ட சமரச முயற்சி நடந்தும், அவர்கள் ஆதரித்து வாக்களிக்க மறுத்து விட்டனர்.

இந்தநிலையில், வாக்களிப்பு நேரம் நெருங்குவதால், வேறொரு உத்தியை கையாண்டுள்ள இரா.சம்பந்தன், அவசரமாக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தை கூட்டியுள்ளார். கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் பிரதானிகளின் உயர்மட்ட கூட்டமான இதில் எடுக்கப்படும் முடிவுக்கு எம்.பிக்கள் கட்டுப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டே, அவசரமாக ஒருங்கிணைப்புக்குழு கூட்டப்பட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here