ஏமாற்றும் அரசுக்கு எதிராக வாக்களிப்பதில் எந்த தவறுமில்லை- வியாழேந்திரன்!

தமிழ் தலைமைகள் அரசாங்கத்தால் ஏமாற்றப்படவில்லை. மாறாக அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு தமிழ் தலைமைகள் தான் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வினைத் தருவதாகக் கூறி ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்களாகியும அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத வக்கற்ற அரசாங்கத்தின் மீது இனியும் நம்பிக்கை வைப்பவர்கள் முட்டாள்களே என நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கு இணங்கி கடந்த வரவு – செலவு திட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளித்தது.

ஆனால் ஒரே இரவில் வர்த்தமானியில் வெளியிடக்கூடிய இந்த சிறிய விடயத்தைக் கூட செய்யாமல் அரசாங்கம் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் போதும் இதே போன்று தான். வழங்கிய வாக்குறுதிகளையும் எவற்றையுமே நிறைவேற்றவில்லை.

எனவே இந்த அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பி கொண்டு சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதில் எந்த தவறும் கிடையாது என அவர் இதன்போது தெரிவித்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here