புலிகளின் பிரமாண்ட தங்கப் புதையலாம்: முல்லைத்தீவில் அகழ்வுப்பணி!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியில் விடுதலைப்புலிகளின் தங்கப் புதையலை தேடி தனியார் வீடு ஒன்றின் வளவில் இன்று (11) அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த பகுதியில் புலிகளின் தங்கப்புதையல் இருப்பதாக கூறி, கடந்த மாதம் 27 ஆம் திகதி முதல் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்தநிலையில், அகழ்வு நடவடிக்கையை மேற்கொள்வதற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த மாதம் 27ஆம் திகதி அதிகாலை இந்த பகுதியில் தங்கத்தை தேடி ஸ்கானர்களுடன் சென்ற 15 பேர் அடங்கிய குழு ஒன்றினை பொலிஸார் கைதுசெய்திருந்தனர். இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை மையமாக வைத்து குறித்த பகுதியில் அகழ்வு செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் புதுக்குடியிருப்பு உதவி பிரதேச செயலாளர், கிராம சேவையாளர், தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்கள், படையினர், பொலிஸார் முன்னிலையில் அகழ்வு பணி மேற்கொள்ளப்பட்டது.

நீண்டநேரம் அகழ்வு நடைபெற்ற போதிலும் எந்தவிதமான பொருட்களும் கிடைக்காத நிலையில் அகழ்வு நடவடிக்கை நிறுத்தப்பட்டது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here