UPDATE: இளைஞன் கொலை விவகாரத்தில் நண்பன் கைது!

நாவலப்பிட்டி இளைஞன் கொல்லப்பட்டதாக பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

இதையடுத்து கொல்லப்பட்ட இளைஞரின் நண்பர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர், வாகனத்திற்குள் உறங்கிக் கொண்டிருப்பதாக கூறி, வாகனத்தை ஒப்படைத்து சென்றவரே கைதாகியுள்ளார்.

உயிரிழந்தவர் 36 வயதான திருமணமாகாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாவலப்பிட்டி நீதிவான் சந்தானி மீகோடா விசாரணைகளை மேற்கொண்டார்.


நாவலப்பிட்டியில் வாகனத்திற்குள் இளைஞனின் சடலம்!

ஹைஏஸ் வாகனத்திற்குள் உயிரிழந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் நவலப்பிட்டியில் உள்ள ரம்புக்பிட்டியில் வசிக்கும் எஸ்.எம்.ஆர்.அசங்க பண்டாரா சமரதுங்க (36) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இறந்தவர் சாரதியாக தொழில்புரிந்து வந்துள்ளார். நேற்று மாலை நண்பருடன் வெளியில் சென்றுள்ளார். வீடு திரும்பியபோது நண்பர் வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். மாலை 6 மணியளவில் வீட்டிற்கு வந்தவர்கள், உயிரிழந்தவரின் தந்தையிடம் வாகன திறப்பை ஒப்படைத்து விட்டு சென்றனர். அவரது மகன் வாகனத்திற்குள் உறங்கிக் கொண்டிருக்கிறார் என தெரிவித்திருந்தார்.

நீண்டநேரமாகியும் மகன் வாகனத்திற்குள் உறங்கிக் கொண்டிருந்ததால் சந்தேகமடைந்த தந்தையால், அம்யூலன்சிற்கு தகவல் கொடுத்தார். மருத்துவகுழுவின் பரிசோதனையின் பின்னரே அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.

உயிரிழந்தவர் போதைக்கு அடிமையானவர் என பொலிசார் குறிப்பிட்டனர்.

நவலாபிட்டி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here