தொலைக்காட்சி நிகழ்வில் கல்முனை தகவல்களை திரித்து கூறிய ஹரீஷ் எம்.பி!

நேற்று இடம்பெற்ற தொலைக்காட்சி அரசியல் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தவறான தகவல்கள் அடங்கில கல்முனை வரைபடமொன்றை காண்பித்துள்ளார்.

கல்முனையின் வரைபடமென அவர் காண்பித்து, அளித்த விளக்கம் தவறானவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவர் காண்பித்த வரைபடத்தில் மஞ்சள் நிறம் தமிழர் பகுதியாகவும், பச்சை நிறம் முஸ்லிம் பகுதியாகவும், சிவப்பு நிறம் நகரும், முஸ்லிம் பகுதியாகவும் ஹரீஸால் கூறப்பட்டது.

ஒரு அரச ஊடகம் ஒன்றில் அதுவும் நேரடி நிகழ்ச்சி ஒன்றில் கல்முனையில் வசிக்கும் மக்களை சரியாக குறிப்பிட்டு காட்டாமல், ஒரு பாகுபாட்டுடன் பிழையாக சித்தரிக்கும் வகையில் பொய்யான ஒரு வரைபடத்தை காண்பித்து இருக்கிறார்.

இதில் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ள பகுதி கல்முனை நகர் பகுதி. இதில் 100% தமிழ் மக்களே வசித்து வருகின்றனர். அதே நேரம் அந்த சிவப்பு நிறத்துக்கு கீழ் உள்ள பச்சை பகுதியிலும் தமிழ் மக்களே பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் 1987ம் ஆண்டு குடியேற்றப்பட்ட இஸ்லாமாபாத் என்கின்ற ஒரு பகுதி முஸ்லிம் மக்களும், சிங்கள கொலனியும் அமைந்துள்ளது.

இப்படியிருக்க, தகவல்களை திரித்து அவர் குறிப்பிட்டுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here