இ.தொ.க தலைமையிலான புதிய கூட்டணி இன்று அறிமுகம்: அழைப்பை நிராகரித்தார் விக்னேஸ்வரன்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையிலான புதிய கூட்டணி இன்று உருவாகிறது.

கொட்டகலையில் இதன் தொடக்க கூட்டம் இடம்பெறும்.

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு போட்டியாக இ.தொ.க பரந்துபட்ட கூட்டணியொன்றை உருவாக்க முயன்றது. எனினும், அது பெரியளவில் வெற்றியடையவில்லை. அமைச்சர் மனோ கணேசனிடம் இருந்து பிரிந்து சென்ற பிரபா கணேசன், சண்.குகவரதன் ஆகியோர் மாத்திரமே இந்த கூட்டணியில் இணைந்துள்ளனர்.

மலையக மக்கள் முன்னணியில் இருந்து இராதாகிருஷ்ணன் இந்த கூட்டணிக்கு செல்ல முன்னர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். எனினும், இ.தொ.கவிற்குள் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கணபதி கனகராஜ் உள்ளிட்டவர்கள் விடாப்பிடியாக எதிர்ப்பை அதற்கு வெளியிட்டனர். இராதாகிருஷ்ணனை உள்ளே எடுப்பது, கட்சி செயற்பாட்டாளர்களை வெளியே அனுப்புவதாக அமைந்து விடும் என்பதால் அந்த முடிவை இ.தொ.க கைவிட்டு விட்டது.

இதற்கிடையில் யாழ்ப்பாணத்திற்கு சென்ற ஆறுமுகன் தொண்டமான், தனது பரந்துபட்ட கூட்டணியில் இணையும்படி தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் க.வி.விக்னேஸ்வரனிடமும் அழைப்பு விடுத்தார். எனினும், மஹிந்த அணியில் உள்ள அந்த கூட்டணியில் இணைய முடியாதென நாசூக்காக விக்னேஸ்வரன் அந்த அழைப்பை நிராகரித்துள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here