விண்வெளிக்கு செலல்விருந்த முதலாவது ஆபிரிக்க கறுப்பினத்தவர் விபத்தில் பலி!

தென்னாபிரிக்காவிலிருந்து விண்வெளி செல்லவிருந்த முதலாவது கறுப்பின விண்வெளி வீரர் மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.

இந்தச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்கள்.

தென்னாபிரிக்காவை சேர்ந்த 30 வயதான மண்ட்லா மசேகோ விண்வெளிக்கு செல்வதற்கு தெரிவாகியதிலிருந்து விண்வெளிக்கு செல்லவுள்ள முதலாவது ஆபிரிக்க கறுப்பினத்தவர் என்ற எதிர்பார்ப்பு பல்வேறு மட்டங்களிலும் ஏற்பட்டிருந்தது.

இதற்கு முன்னர் அமெரிக்கா மற்றும் கியூபா அகிய நாடுகளிலிருந்து ஆபிரிக்க இனத்தவர்கள் விண்வெளி சென்றுள்ளபோதும் ஆபரிக்காவிலிருந்து கறுப்பினத்தவர் ஒருவர் இதுவரை விண்வெளிக்கு சென்றிருக்கறில்லை.

விண்வெளிப்பயணத்துக்கு தெரிவு செய்யப்பட்ட மசேகோ கடந்த 2015 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பயிற்சி பெற்றிருந்தார்.

மிகவும் வறிய குடும்பத்திலிருந்து கல்வி கற்று தனது விண்வெளிக்கனவினை நிறைவேற்றும் தருவாயில் உயிரிழந்த மசேகோ, நெல்சன் மண்டேலாவை தனது இலட்சிய நாயகனாக பின்பற்றினார் என்று கூறப்படுகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here