கல்முனைக்கு சுற்றுலா பயணிபோல வந்த கணக்காளர்: மீண்டும் சூழ்ச்சி?

கல்முனை பிரதேச செயலகத்திற்கு நேற்று (9) புதிய கணக்காளர் நியமிக்கப்படுவார் என நேற்று முன்தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வழங்கிய வாக்குறுதியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்றவில்லை.

மாறாக, சூழ்ச்சிகரமான நகர்வொன்று நேற்று இடம்பெற்றது.

நேற்று காலை கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்திற்கு, அம்பாறை மாவட்ட செயலகத்தை சேர்ந்த கணக்காளர் ஒருவர் (எஸ்.சானக) வந்திருந்தார். சுற்றுலா செல்பவர்களை போலவே அவர் வந்திருந்தார். ஏனெனில், புதிய பதவிக்கு வருவதற்கான நியமன கடிதமோ, இடமாற்ற கட்டளை கடிதங்களோ அவரிடமிருக்கவில்லை.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேசசெயலர் ஏ.ஜே.அதிசயராஜ்ஜை சந்தித்த கணக்காளர், அம்பாறை அரச அதிபரின் கட்டளைப்படியே கல்முனைக்கு வந்ததாக குறிப்பிட்டார்.

எனினும், முறையான அனுமதியின்றி அவரது கடமைகளை பொறுப்பேற்க முடியாதென பிரதேச செயலர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, நேற்று கணக்காளர் கடமைகளை பொறுப்பேற்கவில்லை.

கல்முனையை தரமுயர்த்த வேண்டுமென்பது ஒட்டுமொத்த தமிழர்களின் கோரிக்கையாக வலுப்பெற்று வருகிறது. கல்முனையை தரமுயர்த்த வேண்டுமென மக்கள் போாராடி வருகிறார்கள். இந்த அழுத்த நிலைமையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணிலை சந்தித்து சில முறை வலியுறுத்தியுள்ளது. எனினும், இந்த விவகாரத்தில் ரணில் விக்கிரமசிங்க அரசு சூழ்ச்சிகரமான நகர்வை செய்து, நம்பிக்கையில்லா பிரேரணை வரை இழுத்தடித்து, கூட்டமைப்பு ஆதரவாக வாக்களிக்கும் நிலைமையை உருவாக்குகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here