சிறைப்பிடிக்கப்பட்ட எண்ணெய் கப்பலை விடுவிக்காவிட்டால் பதிலடி: இங்கிலாந்திற்கு ஈரான் எச்சரிக்கை!

எண்ணெய் கப்பல் சிறைப்பிடிப்பு விவகாரத்தில் பதிலடியை கொடுப்போம் என இங்கிலாந்துக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை மீறி சிரியாவுக்கு எண்ணெய் கொண்டு சென்றதாக ஈரானின் எண்ணெய் கப்பலான சூப்பர் டாங்கர் கிரேஸ் கிப்ரால்டர் கடற்பகுதியில் வைத்து சிறைபிடிக்கப்பட்டதாக இங்கிலாந்து தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் சிரியாவிற்கு எண்ணெய் கொண்டு செல்லப்படவில்லை கப்பல் சர்வதேச கடல்பகுதியில் சிறைபிடிக்கப்பட்டுள்ளது என ஈரான் கூறுகிறது.

கப்பலை விடுவிக்குமாறு ஈரான் கேட்டு வருகிறது. இந்நிலையில் கப்பல் சிறைபிடிக்கப்பட்ட விவகாரத்தில் சரியான பதிலடியை கொடுக்காமல் விடப்போவது கிடையாது என ஈரான் பாதுகாப்பு அமைச்சர் அமீர் ஹதாமி எச்சரிக்கை விடுத்துள்ளார் என உள்ளூர் மீடியாவில் செய்திகள் வெளியாகியுள்ளன.

“இங்கிலாந்து நடவடிக்கை சர்வதேச விதிமுறைகளை மீறும் செயலாகும், ஒருவகையான கொள்ளையாகும்” என ஈரான் கூறியுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா தொடர்ச்சியாக பொருளாதார தடைகளை விதித்துவரும் நிலையில் இங்கிலாந்தின் சிறைபிடிப்பு நடவடிக்கை ஈரானுக்கு மற்றொரு நெருக்கடியாக அமைந்துள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here