அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பு 11ம் திகதி: ஈ.பி.டி.பி ஆதரிக்கும்; கூட்டமைப்பு எதிர்க்கலாம்!

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வரும் 10, 11ம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. 11ம் திகதி மாலை வாக்கெடுப்பு இடம்பெறும்.

நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு ஆதரவாகவும், எதிராகவும் அணிகளை திரட்டும் உள்ளக பேச்சுக்கள் தீவிரமாக இடம்பெற்று வருகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க தவறியதன் மூலம் அரச நிர்வாகம் தோல்வியடைந்து விட்டதாக குறிப்பிட்டு, இந்த நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நம்பக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக பொதுஜன பெரமுன, கூட்டு எதிர்க்கட்சி வாக்களிக்கும் என அறிவித்துள்ளது. ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள முஸ்லிம் கட்சிகள், தமிழ் முற்போக்கு கூட்டணியென்பன எதிர்த்து வாக்களிக்குமென தெரிகிறது.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்ப ஈ.பி.டி.பியும் தீர்மானித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரை தனது முடிவை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும், வழக்கம் போல ஐ.தே.க ஆதரவு நிலைப்பாட்டையே கூட்டமைப்பு எடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் அரசு கட்சியின் தேசிய மாநாட்டில், கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அரசுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்குவதாக தெரிவித்திருந்தார். நம்பிக்கையில்லா பிரேரணையையும் கணக்கிலெடுத்தே இந்த அறிவிப்பை அவர் விடுத்ததாக கருதப்படுகிறது.

இதேவேளை, கூட்டமைப்பின் சில எம்.பிக்கள் அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருப்பதாக தெரிகிறது. எனினும், நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பிற்கு 1 மணித்தியாலத்தின் முன் இரா.சம்பந்தன் கூட்டும் அவசர கூட்டத்தின் பின், ரணிலுடனான சந்திப்பை ஏற்பாடு செய்து, அந்த உறுப்பினர்களை சமரசம் செய்யப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

சுதந்திரக்கட்சி இதுவரை தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. நாடாளுமன்ற தெரிவுக்குழு உள்ளிட்ட விவகாரங்களில் சிக்கல்களை சந்திப்பதால், ஐ.தே.கவுடன் இரகசிய சமரசமொன்றிற்கு செல்லலாமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here