இந்தவார ராசிபலன்கள் (7.7.2019- 13.7.2019)

சூரியன், சுக்கிரன், ராகு, புதனால் நன்மையுண்டு.செயல்களில் நேர்த்தி உருவாகும்.உடன்பிறந்தவர் பாசத்துடன் உதவுவர்.

வாகனத்தில் பராமரிப்பு செலவு கூடும்.பூர்வ சொத்தில் வளர்ச்சியும் பணவரவும் அதிகரிக்கும். புத்திரர் பெற்றோரின் அறிவுரையை ஏற்றுச் செயல்படுவர்.நிர்ப்பந்த பணக்கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். மனைவியின் சொல்லும் செயலும் நம்பிக்கை தரும்.தொழில் வியாபாரத்தில் புதிய போட்டியாளரால் லாபம் குறையலாம். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும். பெண்கள் தாய் வழி உறவினர்களின் அன்பை பெறுவர். மாணவர்கள் அக்கறையுடன் படிக்க வேண்டும்.
பரிகாரம்: மீனாட்சி வழிபாடு சுபவாழ்வு தரும்.

சுக்கிரன், குரு, செவ்வாய் ,சந்திரன் அதிக நன்மை வழங்குவர்.உங்கள் மங்கலபேச்சு நன்மையை தரும்.உடன்பிறந்தவர்களுக்கு உதவி புரிவீர்கள்.
வீடு, வாகனத்தில் கூடுதல் பாதுகாப்பு வேண்டும். புத்திரரின் எதிர்கால நலனுக்கு தேவையானதை செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.மனைவி வழி சார்ந்த உறவினர் அதிக அன்பு பாராட்டுவர்.தொழிலில் பணவரவு சுமாராக இருக்கும். பணியாளர்கள் பாதுகாப்பில் கவனம் வேண்டும்.பெண்கள் பிரார்த்தனை நிறைவேறி இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்கள் நன்கு படித்து பரிசு பெறுவர்.
பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு வெற்றியளிக்கும்.

சுக்கிரன், சந்திரன் மட்டுமே அனுகூல பலன் தருவர். முக்கியமான பணிகள் நிறைவேற அதிக கவனம் வேண்டும்.
உறவினர், நண்பர்களிடம் நிதானித்து பேசவும்.தாயின் அன்பு,பாசம் நம்பிக்கையை தரும்.புத்திரர் படிப்பு,வேலையில் முன்னேற்றம் காண்பர்.பூர்வ சொத்தில் அளவான பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.மனைவியின் நல்ல செயல்களை பாராட்டுவீர்கள். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். தொழில், வியாபார நடைமுறையில் சில மாற்றம் செய்வீர்கள். பணியாளர்கள் சுறுசுறுப்பாக செயல்படவும். பெண்கள் பணச்செலவில் சிக்கனம் பின்பற்றுவர்.மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை.
பரிகாரம்: பெருமாள் வழிபாடு செல்வ வளம் தரும்.

குரு, சுக்கிரன், கேது, சனீஸ்வரர் அளப்பரிய நற்பலன் வழங்குவர். பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள்.

நற்பெயரும் பணவரவும் அதிகரிக்கும். வெளியூர் பயணம் இனிய அனுபவம், வேலையில் முன்னேறுவர். பொது நலப்பணியும் ஓரளவு செய்வீர்கள். நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். விவகாரங்களில் சுமுக தீர்வு கிடைக்கும். மனைவியின் சொல்லும் செயலும் குடும்ப நலனுக்கு உதவும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் கணவரின் அன்பில் மகிழ்ச்சிகர வாழ்வு நடத்துவர். மாணவர்கள் படிப்புடன் கலைகளும் பயில்வர்.
பரிகாரம் : சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

சூரியன், சுக்கிரன், ராகு, புதனால் வியத்தகு நற்பலன் கிடைக்கும். மனதில் புத்துணர்வு ஏற்படும். உடன்பிறந்தவருக்கு உதவுவீர்கள்.

தாய்வழி உறவினர்களிடம் கூடுதல் நெருக்கம் ஏற்படும். பூர்வ சொத்தில் வளர்ச்சியும், வருமானமும் கூடும். புத்திரர் நேர்மறை எண்ணங்களுடன் செயல்படுவர். அக்கம் பக்கத்தினர் அன்பு பாராட்டுவர். மனைவியின் நற்செயல்களை பாராட்டுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இடையூறு விலகும். நிலுவைப்பணம் வசூலாகும். பணியாளர்கள் எளிதாக பணி இலக்கை நிறைவேற்றுவர்.பெண்கள் உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு பெறுவர். மாணவர்கள் நன்றாக படிப்பர்.
பரிகாரம்: அம்பிகை வழிபாடு மகிழ்ச்சி தரும்.

சூரியன், செவ்வாய், சந்திரன் அனுகூலபலன் தருவர். செயல்களில் மனப்பூர்வமாக ஈடுபடுவீர்கள். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

சமூக நிகழ்வு மனதில் புதிய மாற்றம் தரும். பழைய வீடு, வாகனம் வாங்குபவர்கள் ஆவணங்களை கவனமுடன் சரி பார்க்கவும். புத்திரர்கள் படிப்பில் முன்னேறுவர். வெளியூர் பயணம் பயனறிந்து மேற்கொள்ளலாம். நோய் தொந்தரவு குறைந்து உடல் ஆரோக்கியம் சீராகும். மனைவியின் ஆர்வம் நிறைந்த செயல் குளறுபடியாகலாம். தொழில், வியாபாரம் புதிய வாடிக்கையாளர்களின் ஆதரவால் வளரும். பணியாளர்களுக்கு பணியிடத்தில் செல்வாக்கு கூடும். பெண்கள் பின்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை.
பரிகாரம்: குரு வழிபாடு சுப வாழ்வு தரும்.

குரு,சுக்கிரன்,கேது, சனீஸ்வரர் சுப பலன் தருவர்.சமயோசித செயலால் சிரமம் விலகும்.

உடன் பிறந்தவர்களின் அன்பு, பாசம் நெகிழ்ச்சி தரும். வாகனப்பயணம் இனிதாக அமையும். புத்திரர் விரும்பி கேட்ட பொருள் வாங்கி தருவீர்கள்.உடல் ஆரோக்கியம் ,பலம் பெறும். மனைவியுடன் கருத்திணக்கமுடன் குடும்ப நலன் பாதுகாத்திடுவார். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியும் பணவரவில் முன்னேற்றமும் ஏற்படும்.பணியாளர்கள் கூடுதல் வேலை வாய்ப்பை ஏற்றுகொள்வர்.பெண்கள் புத்தாடை, நகை வாங்க அனுகூலம் உண்டு.மாணவர்களுக்கு படிப்பில் ஞாபக திறன் வளரும்.
சந்திராஷ்டமம்: 30.6.19 காலை 6:00 – 1.7.19 இரவு 8:57 வரை
பரிகாரம் : துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.

புதன், சுக்கிரன், சந்திரன் அளப்பரிய நற்பலன் தருவர். மனதில் உற்சாகம் வெளிப்படும். குடும்பத்தில் ஒற்றுமை சிறக்கும்.

புத்திரரின் விருப்பங்களை தாராள பணச் செலவில் நிறைவேற்றுவீர்கள். உறவினர் ஆலோசனையால் நன்மை காண்பீர்கள். வழக்கு, விவகாரத்தில் சுமுக தீர்வு கிடைக்கும். மனைவி ஆர்வமுடன் உங்களுக்கு உதவுவார். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்திப்பணி செய்வீர்கள். பணியாளர்கள் கடமையை உணர்ந்து பணிபுரிவர்.பெண்கள் கணவர்வழி உறவினர்களை உபசரித்து நற்பெயர் வாங்குவர். மாணவர்களுக்கு படிப்பில் உரிய கவனம் வேண்டும்.
பரிகாரம் : ஆஞ்சநேயர் வழிபாடு வெற்றியளிக்கும்.

சந்திரன் நற்பலன் வழங்குவார்.எதிர்பார்த்த நன்மை விடாமுயற்சியால் கிடைக்கும். உடன்பிறந்தவர் சொந்த பணியில் கவனம் கொள்வர். வீடு, வாகனத்தில் கூடுதல் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும்.

புத்திரர் உடல் நலத்திற்கு மருத்து சிகிச்சை தேவைப்படலாம். நிர்பந்த கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். மனைவியின் மனதில் நம்பிக்கை வளர உதவுங்கள். தொழில், வியாபாரத்தில் அளவான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும்.பெண்கள் பணம் சேமிப்பதில் ஆர்வம் கொள்வர். மாணவர்கள் பாதுகாப்பற்ற இடங்களில் செல்ல வேண்டாம்.
பரிகாரம்: பெருமாள் வழிபாடு நிம்மதி தரும்.

சூரியன், ராகு, புதன், குரு அதிகளவில் நற்பலன் தருவர். முக்கிய பணிகள் இஷ்ட தெய்வ அருளால் நிறைவேறும். வாழ்வியல் நடைமுறை சிறப்பாக அமையும்.
நண்பர் கேட்ட உதவியை வழங்குவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிறைந்திருக்கும். வெளியூர் பயணம் இனிய அனுபவம் தரும். புத்திரருக்கு அறிவுரை சொல்வதில் இதமான அணுகுமுறை வேண்டும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். பணியாளர்கள் குறிப்பிட்ட கால அவகாசத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர். பெண்கள் குடும்ப நலனைப் பாதுகாத்திடுவர். மாணவர்கள் முயற்சியுடன் படித்தால் முன்னேறலாம்.

சந்திராஷ்டமம்: 7.7.19 காலை 6:00 மணி – 8.7.19 காலை 6:13 மணி
பரிகாரம்: மகாலட்சுமி வழிபாடு மகிழ்ச்சி தரும்.

செவ்வாய்,சுக்கிரன்,கேது,சனீஸ்வரரால் வியத்தகு நற்பலன் ஏற்படும்.இனிய நினைவுகள் புத்துணர்வு தரும்.
புதிய திட்டங்கள் எளிதில் நிறைவேறும்.உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும்.புத்திரர் உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். வழக்கு,விவகாரத்தில் சுமுக தீர்வு கிடைக்கும்.விருந்து,விழாவில் கலந்து கொள்வீர்கள்.மனைவி அதிக அன்பு,பாசம் கொள்வார். தொழிலில் உற்பத்தி,விற்பனை அதிகரிக்கும்.உபரி பணவரவு சேமிப்பாகும்.பணியாளர்கள் கூடுதல் தொழில்நுட்பம் அறிந்து கொள்வர்.பெண்கள் வீட்டு உபயோக பொருள் வாங்குவர்.மாணவர்கள் படிப்பில் அதிக மதிப்பெண் பெறுவர்.
பரிகாரம்: விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.

புதன், குரு, சுக்கிரன் ஆதாயபலன் தருவர். உங்கள் பேச்சில் ஆன்மிக கருத்து மிகுந்திருக்கும். பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள்.

உறவினர் சந்திப்பு ஏற்பட வாய்ப்புண்டு. வெளியூர் பயணத்தால் இனிய அனுபவம் கிடைக்கும். புத்திரர் அறிவார்ந்த செயல்களில் ஈடுபடுவர். நண்பருக்கு கடனாக கொடுத்த பணம் கிடைக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் வளரும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் தாய் வீட்டாருக்கு உதவி செய்வர். மாணவர்கள் படிப்பில் சிறந்து பரிசு, பாராட்டு பெறுவர்.
சந்திராஷ்டமம்: 10.7.19 காலை 9:04 மணி – 12.7.19 பகல் 1:16 மணி வரை
பரிகாரம்: கிருஷ்ணர் வழிபாடு கீர்த்தி தரும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here