‘எல்லா ட்ரசையும் கழட்டிட்டா நம்ம உடம்பு தான் உண்மையான பர்த்டே டிரஸ்’: அமலாபாலின் ஆடை ட்ரைலர்!

நடிகை அமலா பாலின் ஆடை பட ட்ரைலர் வெளியாகியுள்ளது.

கைவசம் நிறைய படங்கள் இல்லை என்றாலும் எப்போதும், ஏதவாது ஒரு சர்ச்சையில் சிக்கி தவிப்பவர் நடிகை அமலா பால். இவர் தற்போது மேயாத மான் பட இயக்குநர் ரத்னகுமார் இயக்கியுள்ள ஆடை படத்தில் நடித்துள்ளார். படத்தின் பரஸ்ட் லுக் வெளியான சமயத்திலே பல சர்ச்சைகள் எழுந்தது. அந்த சர்ச்சை அடங்குவதற்குள் படத்தின் டீஸர் வெளியானது.

அதில் அமலா பால் ஒரு காட்சியில் ஆடையின்றி நடித்துத்திருந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகும் என்று அறிவிப்பட்டுருந்தது. அதன்படி ட்ரைலர் வெளியானது. அதில் மிகவும் தைரியமாக தோன்றும் அமலா பால், தம் அடித்து நண்பர்களோடு பேசிவருகிறார். அப்போது ‘பொறக்கும் போது டிரெஸ் ஓடவா பொறந்தோம். எல்லா ட்ரசையும் கழட்டிட்டா நம்ம உடம்பு தான் உண்மையான பர்த்டே டிரஸ்’ என்று அவர் பேசியுள்ளது மீண்டும் ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

பெண் ஒரு இடத்தில் ஆடை இல்லாமல் மாட்டி கொள்கிறார். அதிலிருந்து அவர் எப்படி மீண்டுவருகிறார் என்பதே படத்தின் கதையாகும். மேலும் வரும் 19ம் திகதி இந்த படம் வெளியாகவுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here