இப்போதும் படுக்கைக்கு அழைக்கிறார்கள்: குமுறும் இளம் நடிகை!

‘மீ டூ ’சர்ச்சைகளில் சிக்கி எத்தனையோ ஆண்கள் அசிங்கப்பட்ட பிறகும், “சான்ஸ் தர்றேன். அட்ஜஸ்ட் பண்ணுவியா“ என்று அழைப்புகள் விடாமல் வந்துகொண்டுதான் இருக்கின்றன என்கிறார் பிரபல மலையாள நடிகை காயத்ரி சுரேஷ்.

நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக கதாநாயகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது ‘மீ டூ’வில் தொடர்ந்து புகார்கள் வருகிறது. சில இயக்குனர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். அந்த வரிசையில் இப்போது மலையாள நடிகை காயத்ரி சுரேசும் பாலியல் புகார் கூறியுள்ளார்.

கேரளாவை சேர்ந்த காயத்ரி சுரேஷ் தமிழில் வெங்கட் பக்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக 4ஜி படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். 2 தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

காயத்ரி சுரேஷ் அளித்த பேட்டியில் “என்னை சிலர் தொடர்பு கொண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு அளிப்பதாகவும், அதற்கு பதிலாக தயாரிப்பாளர்கள் ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும் கூறினர். பட வாய்ப்புக்காக படுக்கைக்கு தயாரா? என்று கேட்டு செல்போனில் குறுந்தகவலும் அனுப்பினர். அவர்கள் அனுப்பிய குறுந்தகவலுக்கு நான் பதில் அளிக்கவில்லை. பதில் சொன்னால் உரையாடல் தொடரும். பதில் அனுப்பாமல் இருந்தால் எனது எண்ணம் புரிந்து ஒதுங்கி விடுவார்கள்” என்று கூறினார்.

மெஸேஜ் அனுப்பியவர்களின் பெயரை வெளியிட்டால் வளர்ந்துவரும் தன்னை ஒழித்துக்கட்டி விடுவார்கள் என்பதால் அவர்கள் பெயரை சொல்லாமல் தவிர்க்கிறாராம் காயத்ரி சுரேஷ்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here