வலி வடக்கு வெங்காய செய்கையாளர்களுக்கு வெங்காய கொட்டில்கள்

முன்னாள் விவசாய பிரதி அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ங்கஜன் இராமநாதனின் சிபார்சின் மூலம் ஜனாதிபதி செயலகத்தினால் நடைமுறை படுத்தப்படும் “தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டம்” மூலமாக வெங்காய கொட்டகைகளுக்கான மானியம் விவசாயிகளுக்கு பெற்று கொடுக்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சிவஸ்ரீ தலைமையில், செயலக மாநாட்டு மண்டபத்தில் (6) இன்று காலை இடம்பெற்றிருந்தது.

அங்கஜன் இராமநாதன் நிகழ்வில் கலந்து கொண்டு விவசாய வெங்காய செய்கையாளர்களிடம் காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டது

தெரிவு செய்யப்பட்ட 124 விவசாய பயனாளிகளுக்கு வெங்காய கொட்டகைக்கான 50 சதவீத மானிய அடிப்படையில் 57500 ரூபா பெறுமதியான வெங்காய கொட்டில்களுக்கான காசோலைகள் வழங்கப்பட்டிருந்தது.

(நாடாளுமன்ற உறுப்பினரின் ஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here