என்னது… லொஸ்லியா விவாகரத்தானவரா?

பிக்பாஸ் முதல் சீசனில் ஓவியா ஒட்டுமொத்த மக்களையும் வெகுவாக கவர்ந்து, ஆர்மியே உருவாக வைத்தார். இரண்டாவது சீசனில் அவர் இடத்தை யாராலும் எட்டி கூட பிடிக்கமுடியவில்லை. இந்நிலையில் தற்போது மூன்றாவது சீசனில் லொஸ்லியாவிற்கு ஆர்மி உருவாக்கி அதகளப்படுத்துகிறார்கள் இளசுகள். ஓவியா ஆர்மி போல, லொஸ்லியா ஆர்மி உருவாகவில்லையென்றாலும், பிக்பாஸில் உருவான இரண்டாவது ஆர்மி அவர்கள்தான்.

பிக்பாஸில் அவர் செய்யும் எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதனை வீடியோவாக எடுத்து ரசிகர்கள் ஷேர் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர். இதனால் தற்போது லொஸ்லியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகிவிட்டனர்.

இப்படி லொஸ்லியா, லொஸ்லியா என அடித்துக் கொள்ளும் ரசிகர்களின் இதயத்தில் குண்டை போடும் தகவலொன்று பரவி வருகிறது. அதாவது லொஸ்லியாவுடன் படித்த ஸ்கூல்மேட் ஒருவர் அவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்றும் விவாகரத்து கூட ஆனது என்றும் டுவிட் போட்டு ஒட்டுமொத்த லொஸ்லியா ஆர்மியின் இதயத்தையும் வெடிக்க வைத்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட படுகவர்ச்சியாக உடையில் லொஸ்லியாவின் புகைப்படமொன்று இணையத்தில் வெளியாகி மெகா வைரலானது. இந்த புகைப்படத்தை கண்ட நெட்டிசன்ஸ் பிக்பாஸ் வீட்டில் குடும்ப குத்துவிளக்கு போன்று உடையணித்துக்கொண்டு வெளியில் எப்படி இருந்திருக்கிறார், அவர் தனது உண்மை முகத்தை மூடி மறைத்து பிக்பாஸ் வீட்டில் இருக்கிறார் என்று குமுறனார்கள்.

இன்னும் சிலரோ, இது லொஸ்லியா இல்லை வேறு யாரோ என்று கூறி மனதை தேற்றிக்கொண்டனர்.

இந்நிலையில் தற்போது லொஸ்லியா திருமணமாகி விவாகரத்தானவர் என்று பரவும் தகவல், அவரது ஆர்மிக்கு பேரதிர்ச்சியயை கொடுத்துள்ளது. இருந்தும் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. ஏனெனில், சோப்ரா என்ற பெயர்கள் இலங்கையில் கிடையாது.

ஒருவேளை இது உண்மையானால், பலர் லொஸ்லியா ஆர்மியிலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிடுவார்கள் என்பது நிச்சயம்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here