கடத்தல் வழக்கு: பிக்பாஸ் வீட்டுக்குள் வனிதாவிடம் பொலிஸ் விசாரணை

ஆள்கடத்தல் வழக்கில் வனிதா விஜயகுமாரிடம் விசாரணை செய்வதற்காக சென்னை செம்பரம்பாக்கத்தில் தனியார் தொலைக்காட்சி நடைபெறும் இடத்திற்குள் தெலங்கானா பொலிசார் சென்றுள்ளனர்.

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. கடந்த 2000ம் ஆண்டில் ஆகாஷ் என்ற டிவி நடிகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகன் மற்றும் ஜோவிகா என்ற மகள் உள்ளனர். இதன் பின்னர் வனிதாவுக்கும் ஆகாஷுக்கும் விவாகரத்து ஆனது. 2007ம் ஆண்டில் ஆனந்தராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் வனிதா. இவர்களுக்கு ஜெயந்திகா என்ற மகள் பிறந்தார்.

2010ம் ஆண்டுக்கு பின்னர் ஆனந்தராஜையும் விவாகரத்து செய்தார் வனிதா. தற்போது அவர் பிக்பாஸ்-3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

தந்தை ஆனந்தராஜுடன் ஜெயந்திகா தெலுங்கானாவில் வசித்து வந்தார். மகள் ஜெயந்திகாவை கடந்த பிப்ரவரி மாதம் வனிதா சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். ஆனால் தனது மகளை கடத்திச் சென்றுவிட்டதாக தெலுங்கானா பொலிசில் ஆனந்தராஜ் புகார் அளித்துள்ளார்.

புகாரை ஏற்றுக்கொண்ட அம்மாநில பொலிசார் வனிதா மீது ஆள்கடத்தல் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் வனிதாவிடம் விசாரணை நடத்துவதற்காக தமிழ்நாடு பொலிஸ் உதவியை நாடியது தெலுங்கானா பொலிஸ். பிக்பாஸ் வீடு காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியில் உள்ள பிலிம்சிட்டி அரங்கில் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நசரத் பேட்டை பொலிசாருடன் தெலுங்கானா பொலிசார் விசாரணை நடத்த சென்று உள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here