இந்தவார ராசிபலன்கள் (30.6.2019- 6.7.2019)

சூரியன், சுக்கிரன், ராகு, புதனால் நன்மையுண்டு.செயல்களில் நேர்த்தி உருவாகும்.உடன்பிறந்தவர் பாசத்துடன் உதவுவர்.

வாகனத்தில் பராமரிப்பு செலவு கூடும்.பூர்வ சொத்தில் வளர்ச்சியும் பணவரவும் அதிகரிக்கும். புத்திரர் பெற்றோரின் அறிவுரையை ஏற்றுச் செயல்படுவர்.நிர்ப்பந்த பணக்கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். மனைவியின் சொல்லும் செயலும் நம்பிக்கை தரும்.தொழில் வியாபாரத்தில் புதிய போட்டியாளரால் லாபம் குறையலாம். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும். பெண்கள் தாய் வழி உறவினர்களின் அன்பை பெறுவர். மாணவர்கள் அக்கறையுடன் படிக்க வேண்டும்.
பரிகாரம்: மீனாட்சி வழிபாடு சுபவாழ்வு தரும்.

சுக்கிரன், குரு, செவ்வாய் ,சந்திரன் அதிக நன்மை வழங்குவர்.உங்கள் மங்கலபேச்சு நன்மையை தரும்.உடன்பிறந்தவர்களுக்கு உதவி புரிவீர்கள்.
வீடு, வாகனத்தில் கூடுதல் பாதுகாப்பு வேண்டும். புத்திரரின் எதிர்கால நலனுக்கு தேவையானதை செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.மனைவி வழி சார்ந்த உறவினர் அதிக அன்பு பாராட்டுவர்.தொழிலில் பணவரவு சுமாராக இருக்கும். பணியாளர்கள் பாதுகாப்பில் கவனம் வேண்டும்.பெண்கள் பிரார்த்தனை நிறைவேறி இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்கள் நன்கு படித்து பரிசு பெறுவர்.
பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு வெற்றியளிக்கும்.

சுக்கிரன், சந்திரன் மட்டுமே அனுகூல பலன் தருவர். முக்கியமான பணிகள் நிறைவேற அதிக கவனம் வேண்டும்.
உறவினர், நண்பர்களிடம் நிதானித்து பேசவும்.தாயின் அன்பு,பாசம் நம்பிக்கையை தரும்.புத்திரர் படிப்பு,வேலையில் முன்னேற்றம் காண்பர்.பூர்வ சொத்தில் அளவான பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.மனைவியின் நல்ல செயல்களை பாராட்டுவீர்கள். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். தொழில், வியாபார நடைமுறையில் சில மாற்றம் செய்வீர்கள். பணியாளர்கள் சுறுசுறுப்பாக செயல்படவும். பெண்கள் பணச்செலவில் சிக்கனம் பின்பற்றுவர்.மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை.
பரிகாரம்: பெருமாள் வழிபாடு செல்வ வளம் தரும்.

குரு, சுக்கிரன், கேது, சனீஸ்வரர் அளப்பரிய நற்பலன் வழங்குவர். பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள்.

நற்பெயரும் பணவரவும் அதிகரிக்கும். வெளியூர் பயணம் இனிய அனுபவம், வேலையில் முன்னேறுவர். பொது நலப்பணியும் ஓரளவு செய்வீர்கள். நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். விவகாரங்களில் சுமுக தீர்வு கிடைக்கும். மனைவியின் சொல்லும் செயலும் குடும்ப நலனுக்கு உதவும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் கணவரின் அன்பில் மகிழ்ச்சிகர வாழ்வு நடத்துவர். மாணவர்கள் படிப்புடன் கலைகளும் பயில்வர்.
பரிகாரம் : சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

சூரியன், புதன், ராகு, சந்திரன் ராஜயோகபலன் தருவர். எண்ணங்களில் புதுமை நிறைந்திருக்கும். நண்பர்கள் உங்கள் சொல்லுக்கு வரவேற்பு தருவர்.

உடன்பிறந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். பிள்ளைகள் அறிவாற்றல், செயல்திறனில் முன்னேற்றம் காண்பர். மனைவியின் மனதில் உங்கள் மீதான நம்பிக்கை வளரும். தொழிலில் வளர்ச்சி பெற நவீன மாற்றம் மேற்கொள்வீர்கள். பணியாளர்கள் பணியிடச்சூழல் உணர்ந்து செயல்படுவர். பெண்கள் இஷ்டதெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவும்.
சந்திராஷ்டமம்: 24.6.19 இரவு 7:30 மணி – 27.6.19 காலை 6:14 மணி
பரிகாரம்: பெருமாள் வழிபாடு செல்வ வளம் தரும்.

சூரியன்,புதன்,செவ்வாய்,சந்திரன் அளப்பரிய நன்மை வழங்குவர்.குடும்ப நலனில் அக்கறை கொள்வீர்கள்.பணிச்சுமை அதிகரிக்கும்.

வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். புத்திரர் பெற்றோரிடம் அதிக அன்பு பாசம் கொள்வர். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். நண்பரிடம் விவாதம் பேச வேண்டாம். மனைவி வழி உறவினர்களால் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் செழித்து பண சேமிப்பு கூடும். பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவர். பெண்கள் விரும்பிய பொருட்கள் வாங்கி மகிழ்வர். மாணவர்கள் படிப்பு தவிர பிற விவாதம் பேசக்கூடாது.
பரிகாரம்: சாஸ்தா வழிபாடு சகல நன்மை தரும்.

குரு, சுக்கிரன், கேது, சனீஸ்வரர் ஆதாயபலன் தருவர். நற்பண்பு உள்ளவர்களின் உதவி கிடைக்கும். உற்சாக மனதுடன் செயல்படுவீர்கள்.

வீடு, வாகனத்தில் பயன்பாடு திருப்திகரமாகும். பிள்ளைகளின் செயல்கள் சிறப்பாக அமைந்து பெற்றோர்க்கு பெருமை ஏற்படுத்தும். வழக்கு, விவகாரங்களில் இருந்த கடின போக்கு மாறி அனுகூல மாற்றம் வரும்.மனைவி உங்களின் நல்ல குணங்களை பாராட்டுவார். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் மதித்து நடப்பர். பெண்கள் பிரார்த்தனை நிறைவேறி தெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்கள் படிப்பில் நல்ல தேர்ச்சி பெறுவர்.
சந்திராஷ்டமம்: 29.6.19 பகல் 2:47 மணி – நாள் முழுவதும்
பரிகாரம்: விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

புதன், சந்திரனால் நன்மை உண்டாகும். மனதில் தைரியமும், செயலில் உற்சாகமும் அதிகரிக்கும். பணிகளை திட்டமிட்டபடி செயல்படுத்துவீர்கள்.

தாய்வழி உறவினர்களிடம்; குடும்ப விவகாரம் பேச வேண்டாம். புத்திரரின் எண்ணம் அறிந்து இதமாக நல்வழி நடத்தவும். ஆரோக்கியம் மேம்படும். மனைவியின் நல்ல கருத்து குடும்பத்தில் ஒற்றுமை வளர்க்கும். வெளியூர் பயணம் புதிய அனுபவம் தரும். தொழில், வியாபாரத்தில் அதிக உழைப்பினால் பணவரவு சீராகும். பணியாளர்கள் கூடுதல் தொழில்நுட்பம் அறிந்து கொள்வர். பெண்களுக்கு தாய்வீட்டாரின் உதவி கிடைக்கும். மாணவர்கள் பாதுகாப்பு குறைந்த இடங்களில் செல்ல வேண்டாம்.
பரிகாரம் : பைரவர் வழிபாடு கஷ்டம் போக்கும்.

சந்திரனால் நற்பலன் கிடைக்கும். திட்டமிட்ட பணிகளை கவனமுடன் நிறைவேற்றுவது அவசியம். தாய்வழி உறவினர் சொந்தம் பாராட்டுவர்.
வீடு, வாகனத்தில் உரிய பாதுகாப்பு வேண்டும். புத்திரர் நல்ல நண்பர்களின் உதவியால் படிப்பு செயல்திறனில் முன்னேறுவர். சொத்து ஆவணம் பிறர் பொறுப்பில் தரக் கூடாது. கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். மனைவியிடம் உறவினர் குடும்ப விவகாரம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலங்களை தவறாமல் பாதுகாக்கவும். பணியாளர் நிர்ணயித்த கால அவகாசத்தில் இலக்கை நிறைவேற்றுவர்.பெண்கள் செலவில் சிக்கனம் பின்பற்றுவர்.மாணவர்கள் நண்பர்களின் உதவியால் படிப்பர்.
பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு வெற்றியளிக்கும்.

பெரும்பான்மை கிரகங்கள் அனுகூல அமர்வில் உள்ளனர். வளர்ச்சிப்பாதைக்கான வழி பிறக்கும். இனிய அணுகுமுறையால் பணி எளிதாக நிறைவேறும்.

வாகனப் பயன்பாடு அளவுடன் இருக்கும். புத்திரர் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வர். மருத்துவ சிகிச்சையால் நோய் தொந்தரவு குறையும். உங்கள் சொல்லும், செயலும் மனைவியின் மனதில் நம்பிக்கையை வளர்க்கும். அரசாங்க உதவி பெற அனுகூலம் உண்டு. புதியவர்களின் ஆதரவில் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் வேண்டும்.
பரிகாரம் : சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

செவ்வாய்,சுக்கிரன்,கேது,சனீஸ்வரரால் வியத்தகு நற்பலன் ஏற்படும்.இனிய நினைவுகள் புத்துணர்வு தரும்.
புதிய திட்டங்கள் எளிதில் நிறைவேறும்.உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும்.புத்திரர் உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். வழக்கு,விவகாரத்தில் சுமுக தீர்வு கிடைக்கும்.விருந்து,விழாவில் கலந்து கொள்வீர்கள்.மனைவி அதிக அன்பு,பாசம் கொள்வார். தொழிலில் உற்பத்தி,விற்பனை அதிகரிக்கும்.உபரி பணவரவு சேமிப்பாகும்.பணியாளர்கள் கூடுதல் தொழில்நுட்பம் அறிந்து கொள்வர்.பெண்கள் வீட்டு உபயோக பொருள் வாங்குவர்.மாணவர்கள் படிப்பில் அதிக மதிப்பெண் பெறுவர்.
பரிகாரம்: விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.

புதன்,சுக்கிரன்,குரு,சந்திரன் சுப பலன் வழங்குவர்.மனதில் உற்சாகம் கூடும்.
நண்பர்களின் உதவி கிடைக்கும். வாகனத்தின் பயன்பாடு திருப்திகரமாகும். புத்திரர் நேர்மை வழியில் நடந்து நன்மை பெறுவர். பூர்வசொத்தில் வளர்ச்சியும்,பணவரவும் கூடும்.உடல் ஆரோக்கியம்,பலம் பெறும்.மனைவியின் நல்ல கருத்து குடும்பத்தில் ஒற்றுமையை வளர்க்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற புதிய திட்டம் உருவாக்குவீர்கள். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும்.பெண்கள் பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வர்.மாணவர்கள் படிப்பில் சிறந்து நண்பருக்கும் உதவுவர்.
பரிகாரம்: பைரவர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here