ஜூலை 19 வெளியாகிறது ஆடை!

‘மேயாத மான் திரைப்படத்தை இயக்கிய ரத்னகுமாரின் அடுத்த படம் ஆடை. அமலா பால் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படம் ஆடை சுதந்திரத்தைப்பற்றி பேசும் படம் என்பதால் அமலா பால் இப்படத்தின் டீசரில் ஆடையின்றி நடிக்கும் காட்சி ஒன்றும் இடம் பெற்றிருந்தது. அந்த காட்சி பாராட்டுகளையும் பெற்றது. இப்படத்திற்கு தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் திகதியை படக்குழு இன்று அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஜூலை 19ம் திகதி திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜி சுப்ரமணியன் தயாரிக்கும் இப்படத்திற்கு பிரதீப் குமார் இசை அமைத்திருக்கிறார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here