ஆண்மைத் திறனை நீடிக்க பயிற்சிகள் செய்ய வேண்டுமா?: டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள் 03!

பவித்திரன் (27)
விசுவமடு

எனக்கு விரைவில் திருமணமாகவுள்ளது. இப்பொழுது எனது ஆண்மையில் எந்த குறைபாடும் இல்லையென நினைக்கிறேன். ஆனால், வயதில் மூத்த ஒருவர் ஆலோசனையொன்று சொன்னார். ஆண்கள் ஆண்மைத்திறனை நீடிக்க பயிற்சிகள் செய்து கொண்டிருக்க வேண்டும் என்றார். அது உண்மையா?

டாக்டர் ஞானப்பழம்: தம்பி, விரைவில் திருமணம் ஆகப் போவதாக கூறியுள்ளீர். இந்த காலப்பகுதியில் இப்படியான ஆயிரம் சந்தேகம் வருவது இயல்புதான். அனுபவஸ்தர்கள் பலதையும் கூறி, உம்மை குழப்புவார்கள். வீணாக மனதை போட்டு அலட்டிக் கொள்ளாமலிருப்பதும் முக்கியமான ஒரு விசயம்.

சரி, விசயத்திற்கு வருகிறேன்.

கிரிக்கெட் போட்டிகள் பார்ப்பீர்கள் என நினைக்கிறேன். நாட்டிலுள்ள சிறந்த வீரர்களை கொண்டு உருவாக்கப்படுவதுதான் நாட்டின் அணி. அதில் இருப்பவர்கள் வீட்டில் நன்றாக சாப்பிட்டு, உறங்கி விட்டு, போட்டி நேரத்திற்கு மட்டுமா மைதானத்திற்கு போகிறார்கள்?

எவ்வளவு பெரிய வீரர் என்றாலும், எவ்வளவிற்கெவ்வளவு பயிற்சியெடுக்கிறாரோ அவ்வளவிற்கவ்வளவு சிறந்த வீரராக இருப்பார்.

மன்மத கலையும் ஒரு விளையாட்டுத்தான். நீர் அதில் ஆட்டநாயகன் விருதை பெற்றுக் கொண்டிருப்பதென்றால், வயதாக ஆக சில பயிற்சிகள் எடுத்துக் கொண்டிருக்க வேண்டியது அவசியம். இது நம்மில் பெரும்பாலான ஆண்களிற்கு தெரிவதில்லை. உமக்கு ஆலோசனை சொன்னவர் மன்மத கலையில் ஒரு மாஸ்டராக இருக்க வேண்டும்.

ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதற்கான பயிற்சிகளை 25 வயதைக் கடந்த எல்லா ஆண்களும் அவசியம் செய்ய வேண்டும். ஏனென்றால், வளரிளம் பருவத்தில் அதிகமாக உற்பத்தியாகும் டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன், இயற்கையாகவே 25 வயதைத் தாண்டும்போது படிப்படியாகக் குறையத் தொடங்கும் என்கின்றன ஆய்வுகள். பல ஆண்களுக்கிருக்கும் தலையாயப் பிரச்னைகள் விரைப்புத்தன்மை குறைபாடு (Erectile Dysfunction), விந்து முந்துதல் (Premature Ejaculation). தாம்பத்யத்தில் முழு திருப்தியடைய, துணையைத் திருப்திப்படுத்த மேற்சொன்ன இரு குறைகளும் இருக்கவே கூடாது.

டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன் சுரக்கும் அளவு, அதன் தன்மையைப் பொறுத்தே ஆண்மைத் தன்மை அமையும். எனவே, அதன் உற்பத்தியை அதிகரிக்கும் பயிற்சிகளைச் செய்வதால் வலிமையான விரைப்புத் தன்மை, சோர்வடையாத உடல் அமைப்பைப் பெற முடியும்.

அப்புறமென்ன, நீர் ஓய்வுபெறும்வரை ஆட்டநாயகன் விருதை பெற்றுக்கொண்டிருக்கலாம்.

சிறிதரன் (29)
உடுப்பிட்டி

எனக்கு திருமணமாகி 3 மாதங்களாகிறது. காதலித்து திருமணம் செய்தோம். எங்களிற்குள் மனரீதியான ஒற்றுமை நன்றாக உள்ளது. ஆனால் எனக்கொரு சங்கடம் மனதிற்குள் அரித்துக் கொண்டிருக்கிறது. உடலுறவு கொள்ளும்போது மூன்று நிமிடங்களிற்குள் விந்து வெளியேறி விடுகிறது. திருமணமான புதிதில் நானும் மனைவியும் சில ஆபாசப்படங்கள் பார்த்தோம். அதில் நீண்டநேரம் உறவுகொள்கிறார்கள். மனைவி அதை விளையாட்டாகத்தான் என்னிடம் சொன்னார். ஆனால் எனக்கு உள்ளூர ஒரு உறுத்தல் அதிகரித்து வருகிறது. உண்மையில் உடலுறவு எத்தனை நிமிடம் நீடிக்க வேண்டும்.

டாக்டர் ஞானப்பழம்: தம்பி நீங்கள் எழுதிய மிக நீண்ட கடிதம் படித்தேன். உங்களிற்கு நான் வழங்கும் முதலாவது ஆலோசனை- உங்களிற்கிடையிலான உடலுறவையும், ஆபாசப்படக் காட்சிகளையும் ஒன்றிணைத்து பார்க்காதீர்கள். ஆபாசப்படங்கள் பார்ப்பதால் உங்கள் தாம்பத்தியம் சீர்குலையும் அபாயமுள்ளது. அது அன்றாட உடலுறவு காட்சிகளல்ல.

`Coital thrusting’ எனப்படும் ஆண்குறியால் பெண்குறிக்குள் உந்தித்தள்ளி விந்தணு வெளியேற்றப்படும் வரையிலான `அனுபவிக்கும்’ இன்பத்துக்கு நேர வரையறையெல்லாம் இல்லை. மனிதருக்கு மனிதர் செக்ஸின் கால அளவு வேறுபடும். அவ்வளவு ஏன்? ஒரே மனிதனுக்கே ஒவ்வொருமுறையும் வெவ்வேறு நேர அளவில் இருக்கும்.

உலகப்புகழ்பெற்ற செக்ஸ் ஆராய்ச்சியாளர் கின்ஸியும் அவரது குழுவும் உலகம் முழுவதும் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் உலகம் முழுவதுமுள்ள 75 சதவிகித ஆண்களுக்கு 2 நிமிட தொடர் உந்துதலுக்குப் பிறகு விந்து பெண்ணுறுப்புக்குள் செலுத்தப்படுகிறது என்று கண்டறிந்திருக்கிறார்கள். மற்றொரு உலகப்புகழ்பெற்ற செக்ஸ் ஆராய்ச்சியாளர்களான மாஸ்டர்ஸ் & ஜோன்சன் ஆகியோர் ஒரு சராசரி ஆண், உடலுறவில் ஈடுபட்ட 4 நிமிடங்களில் உச்சக்கட் டத்தை எட்டி விந்தணுவைப் பெண்ணுறுப்புக்குள் செலுத்திவிடுகிறான் என்று கண்டறிந்திருக்கிறார்கள். அவுஸ்திரேலிய செக்ஸ் ஆராய்ச்சியாளர் ப்ரெண்டன் ஜெட்ச்சா 5.4 நிமிடங்களை உறவு நீடிக்கும் நேரமாகக் கணித்திருக்கிறார். ஒரு நிமிடத்தில் உச்சக்கட்டத்தை அடைவதும், 10 நிமிடத்துக்கு மேல் ஆகியும் உச்சக்கட்டத்தை எட்டாமல் இருப்பதும் மனம் சம்பந்தப்பட்டது. நேரம் கால அளவெல்லாம் செக்ஸுக்கு கணிப்பதே அபத்தம்.

எத்தனை நிமிடம் என்பது முக்கியமல்ல, நீங்கள் இருவரும் திருப்தியடைகிறீர்களா… வாரிசை உருவாக்குகிறீர்களா என்பதே விசயம். திரையில் தோன்றும் இன்பத்தை அனுபவிக்க முயலாமல், கையிலுள்ள இன்பத்தை அனுபவியுங்கள்.

முந்தைய பகுதி: டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள் 02

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here