பிள்ளை இல்லை: யாழ் பெண் விரக்தியில் குளியலறைக்குள் எடுத்த விபரீத முடிவு!

யாழ்ப்பாணத்தில் குடும்பப்பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனக்கு பிள்ளைகள் இல்லையென்ற வருத்தத்திலேயே இந்த தவறான முடிவையெடுத்துள்ளார்.

ஆனைக்கோட்டை சாவற்காட்டை சேர்ந்த க.விஜயா (35) என்பவரே உயிரிழந்தார். கடந்த 21ம் திகதி வீட்டுக் குளியலறையில் தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டியுள்ளார். தீப்பற்றி எரிய ஆரம்பித்ததும், அதை தாங்கிக்கொள்ள முடியாமல் வீட்டுக்குள் ஓடியுள்ளார். தாயார் உடனடியாக தீயை அணைத்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்த்தார். எனினும் சிகிச்சை பலனில்லாமல் நேற்று உயிரிழந்தார்.

தனக்கு பிள்ளைகள் இல்லையென இவர் தீராத மனவுளைச்சலில் இருந்துள்ளார். இந்தியாவிற்கு சென்று இதற்கு தீர்வு காணலாமென கணவன் கூறியிருந்தார். இந்த நிலையிலேயே திடீரென தனக்குத்தானே தீமூட்டியுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here